சிங்கப்பூரில் நேற்று (நவம்பர் 24) மாலை சுமார் 5.45 மணியளவில், Hougang சாலை 52ல் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உடனடியாக குடிமை தற்காப்பு படைக்கு தகவல் அனுப்பப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வந்தவுடன், 2வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்புப் பிரிவில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. செங்காங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள், சுவாசக் கருவிகளை அணிந்து கொண்டு, தீயை அணைக்க விரைந்தனர்.
இதையும் படியுங்கள் : VTL திட்டத்தின் வழிகாட்டுதல்கள் (Guidelines) என்னென்ன?
புகை மண்டலம் சூழ்ந்த இடத்திற்குள் அவர்கள் எச்சரிக்கையுடன் சென்றனர். குறிப்பிட்ட அந்த குடியிருப்பின் சமையலறையில் தான் தீ சம்பவம் எரிந்துகொண்டிருந்தது தெரியவந்தது. தீயணைப்பு வீரர்கள் ஒரு நீர் ஜெட் மூலம் அந்த தீயை உடனடியாக அணைத்தனர். கடுமையான வெப்பம் மற்றும் புகையால் மீதமுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில், SCDF-ன் வருகைக்கு முன்னர் மேல் தள குடியிருப்புகளில் இருந்து சுமார் 20 குடியிருப்பாளர்கள் தாங்களாகவே வெளியேறினர். அவர்களில் 5 பேர் எரிந்துகொண்டிருந்த அந்த வீட்டின் வழியாக உள்ள படிக்கட்டு வழியாக வெளியேறியதால் புகை மண்டலம் அவர்களை சூழ்ந்தது. புகை மண்டலத்தால் பாதிக்கப்பட்ட அவர்களை SCDF படையினர் விரைந்து சிங்கப்பூர் பொது மருத்துவமனை மற்றும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. தீக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.