TamilSaaga

“குழந்தை பருவத்தில் தத்தெடுத்த சிறுமிக்கு பாலியல் சீண்டல்” : சிங்கப்பூரில் 65 வயது வளர்ப்பு தந்தைக்கு 32 மாத சிறை

தனது மகளை குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்த ஒருவர், அந்த சிறுமிக்கு ஆறு வயது தொடங்கியபோது அவளுக்கு பாலியல் சீண்டல்கள் கொடுக்க தொடங்கிய சம்பவம் சிங்கப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் அடையாளத்தைப் பாதுகாக்கும்பொருட்டு அந்த 65 வயதான நபரின் பெயரைக் குறிப்பிட நீதிமன்றம் மறுத்துள்ளது. அந்த சிறுமிக்கு தற்போது இப்போது 18 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் 13 மற்றும் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு

இன்று வியாழன் (நவம்பர் 18) அந்த நபருக்கு 32 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 60 வயதை தாண்டியவர் என்பதால் அவருக்கு தடியடி அளிக்கமுடியாத முடியாத நிலை இருப்பதால் தடியடிக்கு பதிலாக கூடுதலாக 10 வாரங்கள் சிறைத்தண்டன விதிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுமியை துன்புறுத்தியதாக ஒரு குற்றச்சாட்டையும், மானபங்கம் செய்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் அந்த நபர் ஒப்புக்கொண்டார். மேலும் குழந்தையுடன் அநாகரீகமான செயலில் ஈடுபட்டது மற்றும் மானபங்கம் செய்தல் ஆகிய மற்ற இரண்டு குற்றச்சாட்டுகள் தண்டனையின்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

அந்த நபர் தனது 46 வயது மனைவியுடன் நடைபாதை வியாபாரியாக பணிபுரிந்ததாக நீதிமன்றம் கூறியுள்ளது. அவர் பாதிக்கப்பட்ட பெண்ணை குழந்தையாக இருந்தபோது தத்தெடுத்தார் என்றும், இந்த பாலியல் சீண்டல் பல வருடங்களாக நடந்து இறுதியில் போலீசில் புகார் அளிக்கும் வரை அவரை தனது வளர்ப்பு தந்தை என்பது அவளுக்கு தெரியாது என்றும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. =

கடந்த 2009ம் ஆண்டில், பாதிக்கப்பட்டவருக்கு ஆறு வயதாக இருந்தபோது, ​​அவர் தனது மழலையர் பள்ளி பட்டப்படிப்பு நிகழ்ச்சியிலிருந்து வீடு திரும்பி படுக்கையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்த நபர் இவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டார். 2014ம் ஆண்டு தனது பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாலியல் கல்வி பாடங்களை படிக்கும்போது தான் தனது வளர்ப்பு தந்தை தன்னிடம் செய்தது தவறு என்பதை சிறுமி உணர்ந்துள்ளாள். அவளுக்கு 15 வயது இருந்தபோது அவளது வளர்ப்பு தாய் அவளது போனை ஒரு சந்தர்பத்தில் உடைத்துள்ளார்.

அப்போது அந்த நபர் அச்சிறுமிக்கு காசு கொடுத்துள்ளார், அதை அவள் வாங்கியது சிறுமியை கட்டியணைத்து உனக்கு பணம் கொடுத்துள்ளேன் ஆகியால் உன்னை நான் தொடுவேன் என்று கூறி பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார்.

Related posts