TamilSaaga

சிங்கப்பூரில் அனைத்து சந்தைகளிலும் ‘Trace Together’ கட்டாயம் – தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் அறிவிப்பு

சிங்கப்பூரில் உள்ள அனைத்து சந்தைகள் மற்றும் ஹாக்கர் மையங்களுக்கு வருபவர்கள் இப்போது தங்கள் TraceTogether ஆப் அல்லது டோக்கன் மூலம் சரிபார்க்கப்பட வேண்டும். தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நகர சபைகள், ஆபரேட்டர்கள் மற்றும் இதர ஏஜென்சிகளுடன் இணைந்து அனைத்து இடங்களிலும் SafeEntry உடன் அணுகல் கட்டுப்பாட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

சிங்கப்பூரில் Trace Together செயலியில் இருந்து பலர் விலகுவதால், கிருமி தொற்று உறுதியானவர்களிடம் அதிக அளவில் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் சில வாரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

இந்த செயல் நாட்டில் மீண்டும் கிருமி பரவளின் அளவை மீண்டும் அதிகரிக்கும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார். Trace Together மற்றும் Safe Entry போன்ற செயலிகள் கிருமி தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக இருப்பவர்களை குறித்து மிகச்சரியான தகவலை கொடுத்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் அனைத்து ஈரச்சந்தைகள் மற்றும் hawker மையங்களில் கட்டாயமானாக Trace Together இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் வாரத்தாரிற்குள் இதற்கான முன்னெடுப்புகள் நடைபெறும் என்றும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

Related posts