TamilSaaga

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவித்த “50 சதவீதம் வரை தள்ளுபடி” : சென்னை உள்பட 8 இந்திய நகரங்களுக்கு பொருந்தும்

VTL திட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த தனது எல்லைகளை, படிப்படியாக ஒவ்வொரு நாடுகளுக்காக சிங்கப்பூர் திறந்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் நவம்பர் 29ம் தேதி முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பயணிகள் விமான சேவைக தொடங்கவிருப்பதாக கடந்த ஞாயிறு அன்று சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் CAAS அறிவித்திருந்தது. அந்த தடுப்பூசி பயணப்பாதை VTL திட்டத்தில் பயணிப்பதற்கான விண்ணப்பங்கள் VTP கடந்த நவம்பர் 22 சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் – தமிழகம்” : பல மடங்கு உயர்ந்துள்ளதா விமான கட்டணம்?

இந்நிலையில் பல நாட்களாக இந்திய பயணிகள் எதிர்பார்த்த அந்த செய்தி அண்மையில் வெளியானது. SIA எனப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை வரும் 29ம் தேதி முதல் சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த விமான சேவை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்பே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூடுதல் சிறப்பாக SIA வெளியிட்ட முகநூல் பதிவில் “வரும் 29 நவம்பர் 2021 அன்று இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கான விமானங்கள் மீண்டும் தொடங்கும் நிலையில், விரைவில் உங்களை மீண்டும் விமானத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.! இந்த முக்கியமான சந்தர்ப்பத்தை கொண்டாடும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து SIA முனையங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டணங்களில் 50% வரை தள்ளுபடியை வழங்குகிறோம். பயணக் கட்டணம் அனைத்தும் சேர்த்து இந்திய மதிப்பில் ரூபாய் 13,100-லிருந்து டிக்கெட் விலை தொடங்குகிறது” என்று கூறியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

மேலும் டிசம்பர் 31, 2021க்கு முன் பயணம் செய்ய, 30 நவம்பர் 2021 வரை இப்போதே முன்பதிவு செய்யுங்கள் என்று இணையதள முகவரியையும் அளித்துள்ளது.

Related posts