சிங்கப்பூரில் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட தகுதியுள்ள அனைத்து நபர்களும் வரும் திங்கள்கிழமை (நவம்பர் 1) முதல் மாடர்னா தடுப்பூசி மையத்திற்குச் சென்று தங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெறலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று சனிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக்/கம்மிர்னாட்டி அல்லது மாடர்னா mRNA தடுப்பூசிகளின் முதல் இரண்டு டோஸ்களை குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பு எடுத்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நீண்ட கால பயண அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தும் என்று அமைச்சகம் கூறியது.
மேலும் தற்போது, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள், தங்கள் பூஸ்டர் டோஸ்களை பெறுவதற்கு எந்தவித தடுப்பூசி மைய்யத்திற்கும் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமல் சென்று தங்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மாடர்னா தடுப்பூசி மையங்களில் வாக்-இன்களுக்கு இடமளிக்க போதுமான திறன் தற்போது உள்ளது, இது பூஸ்டர் திட்டத்தை விரைவுபடுத்த அனுமதிக்கிறது என்று MOH தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல், ராஃபிள்ஸ் சிட்டி கன்வென்ஷன் சென்டரில் சினோவாக்-கொரோனாவாக் தடுப்பூசியைப் பெற தனிநபர்கள் appointmentகளை செய்யலாம் என்றும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் Appointment இல்லாமல் உள்ளே செல்லலாம் என்றும் MOH தெரிவித்தது.
MOH அதன் ஆய்வை மேற்கோள் காட்டி, பூஸ்டர் டோஸ்கள் குறிப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகின்றன – நோய்த்தொற்றுக்கு எதிராக மேலும் 70 சதவிகிதம் ஆபத்துக் குறைப்பு மற்றும் கடுமையான தொற்றுக்கு எதிராக 90 சதவிகிதம் ஆபத்துக் குறைப்பு ஆகியவற்றதை தருகின்றன என்று கூறியது குறிப்பிடத்தக்கது.