TamilSaaga

“சிங்கப்பூரில் சொந்த மகளை பலமுறை சீரழித்த காமக்கொடூரன்” : மகனுக்கும் தாய்க்கும் நேர்ந்த நிலை என்ன தெரியுமா?

சிங்கப்பூரில் 41 வயதான சவுண்ட் டெக்னீஷியன் ஒருவர் தனது மகளுக்கு ஆறு வருடங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுமட்டுமல்லாமல் அவரை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தனது டீனேஜ் மகனை அவனது சொந்த தாயிடம் பாலியல் ரீதியாக உறவுகொள்ள சொல்லி வற்புறுத்திய நிலையில் தற்போது அவருக்கு 29 ஆண்டுகள் சிறை மற்றும் 24 பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் இந்த வழக்கை “குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவரது உயிரியல் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்க்கு எதிராக அனைத்து குடும்ப உறவுகளையும் முழுமையாகவும் வக்கிரமாகவும் சிதைப்பது முன்னோடியில்லாதது” என்று விவரித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு உத்தரவின் காரணமாக பெயரிட முடியாத அந்த நபர் மீது அவரது மூன்று குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான கடுமையான பாலியல் குற்றங்களுக்காக மேலும் 13 இதே போன்ற குற்றச்சாட்டுகள் மற்றும் 284 ஆபாச படங்களை வைத்திருந்த ஒரு குற்றச்சாட்டு ஆகியவை தீர்ப்பின்போது எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த நபர் 2013ல் அவரது மகளுக்கு ஒன்பது வயது இருக்கும்போதே பாலியல் தொல்லை செய்யத் தொடங்கியுள்ளார் என்று உயர் நீதிமன்றம் கூறியது. 2015ம் ஆண்டு பள்ளி இறுதி விடுமுறை நாட்களில், வீட்டில் தனியாக இருந்தபோது அவரிடம் வாய்வழி உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியுள்ளார் அந்த தகப்பன்.

கடந்த செப்டம்பர் 2017ல், அந்த சிறுமிக்கு 13 வயது இருந்தபோது, அந்த நபர் சிறுமியை அவளது அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெற்றோர் சண்டையிட்டால் தாய் காயமடையக்கூடும் என்ற பயந்ததால் அந்த சிறுமி இந்த விஷயத்தை தனது தாயிடம் சொல்லவில்லை. கடந்த 2018ம் ஆண்டில் ஒரு இரவில், அந்த தாய் குடித்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தனது மகனிடம் அந்த தகப்பன் தன்னை பின்தொடருமாறு கூறியுள்ளார்.

அப்போது 15 அல்லது 16 வயதுடைய அந்த சிறுவனை படுக்கையில் அரைகுறை ஆடையோடு இருந்த அவனது தாயுடன் உறவுகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன் அதற்கு மறுத்துள்ளான். ஆனால் அந்த நபர் தனது அறிவுறுத்தல்களை கடுமையாக்க அண்ட் சிறுவன் வேறு வழியின்று அவர் கட்டளைக்கு அடிபணிந்துள்ளான். சிறுவன் சில நிமிடங்களுக்குப் பிறகு அறையை விட்டு வெளியேற அவனது தாய்க்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

Related posts