TamilSaaga

“மியான்மருக்கு புதிய சிறப்பு தூதர்” : சிங்கப்பூரர்களை மீண்டும் பெருமைப்படுத்திய “Noeleen” – யார் அவர்?

மியான்மர் நாட்டிற்கான புதிய சிறப்புத் தூதராக அதிகாரியாக நமது சிங்கப்பூரை சேர்ந்த சமூகவியலாளர் நோலீன் ஹெய்சரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 25) அன்று ஐநா-வின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் அறிவித்துள்ளார். இதற்கு முன்பு அந்த பதவியில் பணியாற்றி வந்த சுவிட்சர்லாந்தின் கிறிஸ்டின் ஸ்ரானர் பர்கெனருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

73 வயதான ஹெய்சர், ஐக்கிய நாடுகள் சபையில் பல மூத்த பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2007 மற்றும் 2014-க்கு இடையில் ஆசியா மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் தலைவராக இவர் பதவிவகித்தார். மேலும் 2013 மற்றும் 2015-க்கு இடையில், அவர் கிழக்கு திமோரின் சிறப்பு ஆலோசகராக பணியாற்றினார் என்பதும் சிங்கப்பூரர்களாகிய நாம் பெருமைகொள்ளவேண்டிய விஷயம்.

பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தில் தனது கடமைகளின் ஒரு பகுதியாக, ஹெய்சர் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துடன் (ASEAN) நெருக்கமாக பணியாற்றினார். அதே போல மியான்மர் அதிகாரிகளுடன் வளர்ச்சி மற்றும் வறுமையின் குறைப்பு குறித்தும் பணியாற்றினார். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு, பத்து ஆண்டுகால ஜனநாயக காலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபையும் ஆசியானும் இராணுவ ஆட்சிக்குழுவை அரசியல் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவும், ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட சிவிலியன் அதிகாரிகளை விடுவிக்கவும் தோல்வியுற்றன என்றே கூறலாம்.

Related posts