TamilSaaga

“சிங்கப்பூரில் மற்றவர்களுக்கு தொற்று அபாயத்தை ஏற்படுத்திய பெண்” – 12 வார சிறை தண்டனை அறிவிப்பு

கடந்த ஆண்டு பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிய பிறகு பெருந்தோற்று அபாயத்தை மற்றவர்களுக்கு பரவும் விதமாக செயல்பட்ட பெண்ணுக்கு இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 30) ​​12 வார சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த எஸ்தர் டான் லிங் யிங், ஒரு வாரம் கழித்து பெருந்தொற்றுக்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்டு அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி அன்று, மாவட்ட நீதிபதி என்ஜி பெங் ஹாங், 24 வயது நிரம்பிய சிங்கப்பூரரை, ஒரு வழக்கு விசாரணைக்கு பின்னர், தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். டான் தனது இளங்கலை பட்டப்படிப்பை லண்டனில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கினார். ஆனால் சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆலோசனையைப் பின்பற்றி, கடந்த ஆண்டு தனது படிப்பை முடிப்பதற்கு முன்பு இங்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரிட்டனை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, அவருக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. மற்றும் அவரது சுவை மற்றும் வாசனை உணர்வை அவர் இழந்துள்ளார். இந்த நிலையில் அவர் அங்கு ஒரு மருத்துவரை அணுகாமல், லண்டனில் இருந்து சிங்கப்பூர் புறப்படும் நாள் வரை தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 23ம் தேதி அன்று சாங்கி விமான நிலைய முனையம் 1ல் தரையிறங்கியபோது டானுக்கு மூக்கு அடைப்பு, மற்றும் சுவை மற்றும் வாசனை திறன் குறைந்தே காணப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு தங்குமிட தனிமைப்படுத்துதல் அறிவிப்பு (SHN) வழங்கப்பட்டது.

குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி அதிகார அதிகாரி உடனடியாக அவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினார். மேலும் அந்த பெண்மணி மதியம் 2.40 மணியளவில் தனது குடியேற்றத்தை முடித்தார். ஆனால் வீட்டிற்குச் செல்வதற்கு முன், அவரும் அவருடைய பெற்றோரும் முனையம் 1ல் உள்ள உணவுக் கோர்ட்டில் சாப்பிட்டனர், அங்கு சுமார் 30 நிமிடங்களை அவர் செலவிட்டுள்ளார். அதன் பிறகு MRTயில் பயணித்துள்ளார்.

பிறகு மருத்துவரை சந்தித்து மருந்து பெரும் நிலையில் அவர் தனது வெளிநாட்டு வருகை குறித்த பொய் உரைத்துள்ளார். இந்நிலையில் தொற்று பிறருக்கு பரவும் வகையில் செயல்பட அவருக்கு 12 வார சிறை அளிக்கப்பட்டுள்ளது.

Related posts