TamilSaaga

“சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு பணிப்பெண்” – பிறப்புறுப்பில் எட்டி உதைத்த முதலாளிக்கு 15 மாத சிறை

சிங்கப்பூரில் தன்னிடம் வேலை பார்த்த பணிப்பெண்ணை உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய பெண்ணுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) அன்று 15 மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறை தண்டனை விதிக்கப்பட்டள்ளது. அந்த பணிப்பெண்னிடம் “உன் மீது துர்நாற்றம் வீசுகிறது” என்று கூறி, அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் உதைத்துள்ளார் அந்த பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஸ்டியானா அப்துல் ரஹீம் என்ற அந்த 33 வயது பெண்மணியை, பாதிக்கப்பட்டவருக்கு 2,500 டாலர் இழப்பீடு வழங்கவும், மேலும் அதை வழங்க தவறினால் தவறினால் மேலும் 11 நாட்கள் சிறையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்படக்கூடிய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு என்பது பொது நலன் சார்ந்த விஷயம் என்றும், அத்தகைய நபர்களுக்கு சட்டத்தின் கீழ் சிறப்புப் பாதுகாப்பு தேவை என்றும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தெரிவித்தார். இதற்கு முன்பாக ரோஸ்டியானா பணிப்பெண்னை அவமதித்தல், காயப்படுத்துதல் மற்றும் மிரட்டல் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 21 வயதாகும் அந்த பணிப்பெண் இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கடந்த செப்டம்பர் 2017ல் முதல் முறையாக வேலைக்கு வந்துள்ளார். சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக அந்த பணிப்பெண்ணுக்கு விடுப்போ அல்லது அவருடைய பணிக்கான ஊதியமோ வழங்கப்படவில்லை. ரோஸ்டியானாவின் தாயின் வீட்டில் உள்ள ரோஸ்டியானாவின் குழந்தைகளைக் கவனித்து, வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொள்ளும் பணி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Related posts