இன்று சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் லீ சியென் லூங், நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 8) தனது தேசிய தின செய்தியை வெளியிட்டார். பெருந்தொற்றுக்கு எதிரான சிங்கப்பூர் நாட்டின் போர் குறித்தும், மேலும் இந்த வைரஸ் நெருக்கடியில் நாடு சமாளிக்க வேண்டிய மூன்று சிக்கல்களை பற்றியும் பிரதமர் தனது உரையில் பேசினார்.
குறைந்த ஊதியத் தொழிலாளர்கள்
சிங்கப்பூரில் உள்ள குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் இந்த பெருந்தொற்றுன் தாக்கத்தை மிகக் கடுமையாக உணர்ந்துள்ளானார். குறைந்த வருமானம் மற்றும் எதிர்பாராத வேலை இழப்புகளைச் சமாளிப்பது அவர்களுக்கு கடினமாக உள்ளது. இருப்பினும் இந்த குறுகிய காலத்தில், நெருக்கடிக்கு மத்தியிலும் அவர்களுக்கு அதிக உதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
வெளிநாட்டினர்
சிங்கப்பூர் தனது உள்ளூர் பணியாளர்களை உலகெங்கிலும் உள்ள திறமைகளுடன் பூர்த்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அதிக நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து சிங்கப்பூரர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். Work Pass பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது சிங்கப்பூரர்கள் இயல்பாகவே வேலைக்கான போட்டி பற்றி கவலைப்படுகிறார்கள் என்றார் அவர். அரசாங்கம் இந்த கவலைகளை நிவர்த்தி செய்கிறது, இங்குள்ள வெளிநாட்டவர்களின் தரம், எண்கள் மற்றும் செறிவுகளை நிர்வகிக்க அதன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறினார்.
இனம் மற்றும் மதம்
சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று, ஏனெனில் சமூக விதிமுறைகள் பல்வேறு வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் வெளிப்புறப் போக்குகளால் தொடர்ந்து வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு புதிய தலைமுறையினராலும், சிங்கப்பூரின் இன நல்லிணக்கம் புதுப்பிக்கப்பட்டு வலுவூட்டப்பட வேண்டும் என்றார் அவர். சமீபத்திய இனவெறி சம்பவங்கள் கவலை அளிக்கிறது, ஆனால் அவை நிரந்தரமானது அல்ல. இனம் மற்றும் மதம் சார்ந்த பிரச்சனைகள் எப்படி சமூகத்தை எளிதில் பிளவுபடுத்தும் என்பதை அவர்கள் விளக்குகிறார்கள். ஆனால் அதற்கு இடமளிக்காமல் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றார்.