TamilSaaga

இத்தாலியில் G20 மாநாடு.. ஐந்து நாள் பயணத்தில் முக்கிய பேச்சுக்கள் இடம்பெறும்

இத்தாலியில் வருகின்ற ஜீன்.27 முதல் ஜீலை.1 வரை G20 மாநாடு நடக்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் அவர்கள் இத்தாலி செல்கிறார்.

இந்த G20 மாநாட்டில் முக்கியமாக ISIS இயக்கங்களின் செயல்பாடுகளை ஒடுக்கவது தொடர்பான கலந்துரையாடலில் பல நாடுகளின் அமைச்சர்கள் கலந்துகொள்கிறார்கள்.

ஈராக் சிரியா போன்ற நாடுகளில் இருந்துவரும் எஞ்சிய ISIS இயக்கங்கள் அவற்றின் அச்சுறுத்தல்களை நீக்குவது குறித்து உரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நாடுகள் மற்றும் அதன் நிர்வாகங்களை வலிமையாக்குவது, உணவு பாதுகாப்பு தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்படும் எனவும் கூறப்படுகிறது.

Related posts