அமைச்சுகளுக்கான பணிக்குழுவின் இணைத்தலைவர்கள்
திரு.கான் கிம் யோங், திரு.லாரன்ஸ் வோங் மற்றும் திரு.ஓங் யீ காங் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
கொரோனா நோயானாது தொடர்ந்து பல்வேறு புதிய பரிமாணங்களில் உருமாறி உலவி வருகிறது. இந்த கொரோனா நோயானது நிரந்தரமாக உலவும் வாய்ப்பு உள்ளது.
Influenza சளிக்காய்ச்சல் போன்று இந்த கொரோனா நோய் தொற்றுடனும் மக்கள் வாழ பழகிக்கொள்ள வேண்டிய சூழல் வரும்.
உலகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சளி காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற அளவிற்கு செல்வதில்லை.
சிறிய அளவிலான மருந்துகளை எடுத்துக்கொண்டோ அல்லது மருந்துகள் இல்லாத நிலையிலோ கூட குணமடைகிறார்கள்.
இந்த சளிக்காய்ச்சலால் பெரிய அளவிலான உடல்நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறைவாக காணப்படுகிறது. வயதில் மூத்தவர்கள் அல்லது பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே மரணம் அடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே மக்கள் சளிக்காய்ச்சலோடு வாழ பழகிக்கொண்டு உள்ளனர்.
அதுபோல இந்த கொரோனா தொற்றுடனும் மக்கள் வாழ்வதற்கு பழகிகொள்ள வேண்டிய காலம் ஏற்படலாம். அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் தினசரி கொரோனா பரிசோதனை, பெரிய அளவிலான தொற்று தொடர்புகளை கண்டறிதல் மற்றும் தனிமைப்படுத்தி வைப்பது போன்ற செயல்முறைகளை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வெளிநாட்டு பயணிகள் மற்றும் பயணங்களை அனுமதிப்பது, புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்களை மேற்கொள்வது போன்றவை அனுமதிக்கப்படலாம்.
அடுத்து வரும் மாதங்களில் இதனையெல்லாம் செய்வது தங்களது முன்னுரிமையாக அறிவித்துள்ளனர். இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்த விரிவான திட்டம் இருப்பதாகவும் அமைச்சுகளுக்கு இடையேயான பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.