TamilSaaga

உடலில் ஒரே நேரத்தில் ஆல்ஃபா, பீட்டா வைரஸ்.. 90 வயது மூதாட்டி பலி – ஆய்வாளர்கள் குழப்பம்

கொரோனா பெருந்தொற்று பெரும்பாலான நாடுகளில் கட்டுக்குள் வந்த நிலையில், திடீரென வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவத் தொடங்கியது. ஒவ்வொரு நாட்டிலும் உருமாறிய கொரோனாவிற்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன.

இந்நிலையில், பெல்ஜியத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவர், தனக்கு இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதை அறிய பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவர் ஆல்ஃபா, பீட்டா என இரு உருமாறிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், இரண்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆல்ஃபா வைரஸ் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. பீட்டா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டறிப்பட்டது.

இந்த இரண்டு வைரஸும், இரண்டு வெவ்வேறு நபர்களிடம் இருந்து அந்த மூதாட்டிக்கு பரவியிருக்கலாம் என தெரிகிறது. ஆனால், எப்படி பாதிக்கப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts