சிங்கப்பூரில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு உணவு மற்றும் பானக்கடைகள் மேலும் சில நிறுவனங்கள் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அள்ளித் தருகின்றன. முக்கியமான 12 சலுகைகள் என்ன?
- 1. சிங்கப்பூரில் உள்ள Millennium Hotels and Resorts in Singapore – Orchard Hotel, Grand Copthorne Waterfront Hotel, Studio M Hotel, M Social, M Hotel and Copthorne King’s Hotel ஆகிய ஹோட்டல்களில் தடுப்பூசி சான்றிதழோடு வருபவர்களுக்கு தேசிய தின ஸ்பெசலாக உணவு அட்டவணையில் உள்ள உணவுக்கு 56% தள்ளுபடி.
- 2. Grand Mercure Singapore Roxy உணவகத்தில் தடுப்பூசி போட்டகர்களுக்கு மாலை நேர டீ ரூம் பேக்கேஜ் என்பதற்கு 10% தள்ளுபடி.
- 3. Great Eastern’s கம்பெனி சார்பில் தடுப்பூசி போட்டவர்களுக்கு post-vaccination protection plan என்ற காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது.
- 4. Singtel நிறுவனம் தடுப்பூசி போட்டவர்களுக்கு மொபைல் போன் வாங்க 250 வெள்ளி வரை ஆஃபர் வழங்குகிறது.
- 5. GNC outlets கடைகளில் தடுப்பூசி போட்ட சான்றிதழை காட்டுபவர்களுக்கு மல்டி விட்டமின் மற்றும் விட்டமின் பொருட்களுக்கு 20% தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
- 6. DurianBB கடைகளில் 6.90 வெள்ளி மதிப்புள்ள டூரியன் BB 50/50 என்ற பழம் நீங்கள் வாங்கும் எந்த ஒரு பொருட்களோடும் இலவசமாக வழங்கப்படுகிறது.
- 7. Cineleisure Orchard உணவுக்கடையில் தடுப்பூசி போட்டவர்களுgyoza Fire gyoza இலவசமாக வழங்குகிறது.
- 8. dim sum chain Tim Ho Wan தடுப்பூசி திட்டம் மற்றும் தேசிய தினம் சார்பாக வீட்டுற்கு கொண்டு செல்லும் குறிப்பிட்ட உணவுகளுக்கு 56% தள்ளுபடி அளிக்கிறது.
9.Tekong Seafood மூலம் ஆர்டர் செய்து டெலிவரி செய்யப்படும் உணவுகளுக்கு 15% தள்ளுபடி அறிவித்துள்ளது.
10.Hook Coffee கடை முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு 15% தள்ளுபடி வழங்குகிறது.
11. Fashion brand Style Theory நிறுவனம் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு Bag மற்றும் இதர பொருட்களுக்கு தள்ளுபடி தருகிறது
12. The Projector’s two cinemas வாடிக்கையார் வாங்கும் ஒவ்வொரு F&B பொருட்களுடனும் ஒரு பாப்கார்ன் இலவசமாக வழங்குகிறது. இது முழுமையாக தடுப்பூசி செலுத்தொக்கொண்டவர்களுக்கு மட்டும் என அறிவித்துள்ளது.
இப்படி பல நிறுவனங்களும் தள்ளுபடி மற்றும் சலுகைகள் அளித்து தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்கிறது. இந்த சலுகைகள் எல்லாம் அந்தந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ள கடைசி தேதி மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டது.