TamilSaaga

“தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூரின் LiSHA நடத்தும் பட்டிமன்றம்” : தமிழகம் மற்றும் சிங்கப்பூர் பேச்சாளர்கள் பங்கேற்பு

சிங்கப்பூரில் இந்த பெருந்தொற்று பரவல் காலத்திலும் தீபாவளி பண்டிகை உரிய பாதுகாப்பது நடவடிக்கைள் மூலம் சிறப்பான முரையில் கொண்டாட சிங்கப்பூர் தயாராகி வருகின்றது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியிட்டுள்ள நமது அமைச்சர் ஈஸ்வரன் “தீபாவளிக்கு சிறப்பாக எங்கள் ரயில்கள், பேருந்துகள், ரயில் நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையங்களின் அலங்காரங்களை உங்களில் சிலர் கவனித்திருப்பீர்கள்.”

“வருடாந்திர பாரம்பரியத்தைத் தொடர்ந்து, லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் (LiSHA) நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது. ரங்கோலி, பல வண்ணங்களில் மின்னும் தரை அலங்காரம் மற்றும் பாரம்பரியமாக பல்வேறு வகையான வண்ண அரிசி மற்றும் தானியங்களைப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் மற்றும் பாரம்பரிய விளக்குகளும் மின்னுகிறது. இந்த தீபத்தின் ஒளி இருளைக் அகற்றுகின்றது.” என்றார்.

இந்நிலையில் சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் உள்ள LiSHA எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் பாரம்பரிய சங்கம் தற்போது வெளியிட்டுள்ள தனது முகநூல் பதிவில் “தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நமது லிஷாவும் (LISHA) புதுயுகம் தொலைக்காட்சியும் இணைந்து வழங்கும் மெய்நிகர் பட்டிமன்றம் நடக்கவுள்ளது” என்று தெரிவித்துள்ளது. “தமிழகப் பேச்சாளார்களுடன், நமது சிங்கப்பூர் பேச்சாளார்கள் கலந்து கொண்டு முனைவர் மு.இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் கலக்கிய தீபாவளிச் சிறப்பு மெய்நிகர் பட்டிமன்றம் புதுயுகம் தொலைக்காட்சியில் , தீபாவளி தினத்தன்று மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது(இந்திய நேரப்படி காலை 11 மணி)” என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தீபாவளி நெருங்கியும் மந்த நிலையில் லிட்டில் இந்தியா வியாபாரம்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தளர்வுகள் அதிக அளவில் உள்ள போதும் பெருகிவரும் பெருந்தொற்று காரணமாக லிட்டில் இந்தியாவில் வியாபாரம் மந்தமாகவே உள்ளது.

Related posts