TamilSaaga

அரையிறுதியில் தோல்வி.. அடுத்து பி.வி சிந்து செய்ய போவது இதைத்தான்!

கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து, இம்முறை எப்படியும் தங்கப்பதக்கத்தை வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் சிந்து அரையிறுதியில் போராடி தோல்வியைத் தழுவினார்.

அரையிறுதிப் போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது. இந்தியாவின் பி.வி.சிந்து மற்றும் சீன தைபையின் தை ட்சு யெங் ஆகியோர் மோதினர்.

முதல் செட்டின் துவக்கத்தில் 5-2 என்ற கணக்கில் சிந்து முன்னிலை பெறத் துவங்கினார். இதனையடுத்து சீன தைபை வீராங்கனை சிறப்பாக விளையாடி, முன்னிலை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய தை ட்சு யெங், முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அடுத்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் சீன தைபை வீராங்கனைதான் ஆதிக்கம் செலுத்தினார். சிந்துவால் ஒரு இடத்தில்கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இறுதியில் 21-11 என்ற கணக்கில் தூ ட்சு யெங் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

மனம திறந்த சிந்து:

”அரையிறுதிப்போட்டி என்பது மிகப்பெரிய ஒன்றாகும். எனவே அதில் நாம் சுலபமாக புள்ளிகளை பெற்றுவிடலாம் என எண்ண முடியாது. எப்போதும் வெற்றி பெறும் பக்கமே இருக்க முடியது. தற்போதைக்கு நான் அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும். இது இன்னும் முடியவில்லை. அடுத்த போட்டியில் சிறப்பாக ஆடுவேன் என நம்புகிறேன்” என்று சற்று வருத்தத்துடனே பேட்டி அளித்தார்.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹெ பிங் ஜியாவ்-ஐ சிந்து இன்று எதிர்கொள்கிறார்.

Related posts