அனைவருக்கும் லீவு விட்டா வெளி இடங்களுக்கு போக ரொம்ப பிடிக்கும். அப்படி போகும்போது பட்ஜெட் தான் கொஞ்சம் பிரச்சனையா இருக்கும். அப்படி சிங்கப்பூர்ல எங்கெல்லாம் செலாவில்லாம சுற்றுலா செல்லலாம் என்பதைப் பற்றிய சிறிய தொகுப்பு தான் இது!
- Merlion Park :
சிங்கப்பூரின் பிரதான சின்னமான மெர்லயன் சிலை Fullerton ரோட்டில் அமைந்துள்ளது. இங்கு செல்ல அனுமதி இலவசம். இந்த மெர்லயன் சிலை உள்ள இடத்தில் புகைப்படம் எடுப்பது அனைவரும் விரும்பும் ஒரு சுற்றுலாவாகும்.
- Botanic Gardens :
165 வருடம் பழமையான இந்த சிங்கப்பூர் உயிரியல் பூங்கா Orchen Road-ல் உள்ள Fringe என்ற பகுதியில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 3 பழமையான தோட்டங்களில் வெப்பமண்டல பகுதியில் அமைந்துள்ள ஒரே தோட்டம் இதுவாகும். இந்த தோட்டத்தில் பல்வேறு வகையான செடிகள் மற்றும் பூக்களை பார்க்கலாம். இயற்கை எழிலுடன் உங்கள் பொழுதைக் கழிக்க மிகவும் ஏற்ற இடமாக இது இருக்கும்.
- Sungei Buloh Wetland Reserve :
இந்த சதுப்பு நிலப்பகுதியானது சிங்கப்பூரின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு இயற்கை பூங்காவாகும். இங்கு பல விதமான பறவைங்கள் பல கண்டங்களில் இருந்து வந்து செல்லும். அதனைக் காண இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மாங்க்ரோவ் காடுகள், குளங்கள் மற்றும் பறவைகள் என திரும்பும் இடமெல்லாம் அழகிய இயற்கைக் காட்சிகள் அமைந்துள்ள இந்தத் தளம் அனைவருக்குமான சிறந்த சுற்றுலா தலமாக இருக்கும்.
- Chinese and Japanese Gardens :
பாரம்பரியமான மற்றும் அமைதியான சூழலில் பொழுது போக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு அருமையான ஸ்பாட். 1974-ல் உருவாக்கப்பட்ட இந்த இடம் Jurong East-ல் அமைந்துள்ளது.
- Lau Pa Sat :
ஏறத்தாழ 130 வருடங்களாக செயல்பட்டு வரும் பழமையான வணிக வளாகம் மற்றும் உணவு வீதியான இது பல மக்களின் விருப்பத்தேர்வாக இன்றும் இருந்து வருகிறது. இங்கு ஏராளமான உணவுகள் வழியெங்கும் வண்ண விளக்குகள் மற்றும் இசை போன்றவை இருக்கும். சிறந்த பொழுதுபோக்கிற்கும் மலிவான விலையில் விதவிதமான உணவுகளை ருசிப்பதற்கும் இது மிகச்சிறந்த இடமாக இருக்கும்.
- Marina Bay Sands Light and Water Show :
மெரினா பே சாண்ட் கட்டிடத்தில் நடத்தப்படும் வண்ண விளக்கு காட்சிகள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் விதமாக நடைபெறும். அனைவரும் இதனை இலவசமாகக் காணலாம். தினமும் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை இந்த ஒளி, ஒலி காட்சிகள் நடைபெறும். வார இருந்து நாட்களில் மற்றொரு காட்சி 11 மணி வரை நடைபெறும்.
7. Sri Mariamman Temple :
சிங்கப்பூரின் பழமையான இந்து சமய கோவில் இதுவாகும். இதன் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்தை சிறப்பாக பிரதிபலிக்கக்கூடியதாகி இருக்கும். குடும்பத்துடன் உங்கள் நேரத்தை செலவிட மிகவும் சிறந்த கலாச்சார இடமாக இந்தக் கோவில் இருக்கும்.
- National Library of Singapore :
புத்தக விரும்பிகளுக்கான சிறந்த இடம் நூலகம். சிங்கப்பூர் தேசிய நூலகம் ஏறத்தாழ லட்சக்கணக்கான புத்தகங்களைக் கொண்டுள்ள ஒரு மிகப்பெரிய நூலகம் ஆகும். உங்கள் நேரத்தை பயனுள்ளதாக கழிக்க விரும்பினால் நூலகம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
மேற்கண்ட அனைத்து இடங்களும் அதிகமான செலவுகளின்றி உங்கள் பொழுதை கழிக்க சிறந்த தேர்வாக இருக்கும்.