TamilSaaga

“கத்தி முனையில் சிங்கப்பூர் சைனாடவுனில் நடந்த கொள்ளை” : இரண்டாவதாக கைதான நபர் கோர்ட்டில் ஆஜர்

சிங்கப்பூர் சைனாடவுனில் உள்ள விடுதியில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டாவது நபர் மீது இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 28) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ஏஞ்சலோ என்ஜி செக் கியாங் என்ற 41 வயது நபர் கடந்த செப்டம்பர் 24ம் தேதியன்று அதிகாலை 3 மணியளவில் சைனாடவுன் கோயில் தெருவில் உள்ள S Inn என்ற ஹாஸ்டலுக்கு சென்று கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்டார்.

அந்த நபர் தனது கையில் ஒரு கத்தியுடன், 37 வயதுடைய ​​கோ சூன் கிம்என்பவருடன் சென்று நான்கு பேரிடம் 1,000 டாலர்களை கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு செப்டம்பர் 25 அன்று கோ மீது குற்றம் சாட்டப்பட்டது. முந்தைய செய்திக்குறிப்பில், செப்டம்பர் 24 அதிகாலை 3.15 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மத்திய காவல் பிரிவு மற்றும் டாங்ளின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஐந்து மணிநேரங்களுக்குப் பிறகு லோரோங் 1 டோ பயோவில் கோவைக் கைது செய்தனர். செப்டம்பர் 25 அன்று மாலை 3 மணியளவில் ஹூகாங் அவென்யூ 5ல் என்ஜி கைது செய்யப்பட்டார். இன்று செவ்வாய்க்கிழமை வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகி, என்ஜி மாண்டரின் மொழியில் குற்றச்சாட்டைப் படித்தார். மேலும் அவர் மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறினார். அதனையடுத்து விசாரணைக்கு உதவுவதற்காக அவர் ஒரு வாரம் ரிமாண்ட் செய்யப்பட உள்ளார்.

இதே போன்ற பிற குற்றங்களுக்காக அவர் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைகள் முடிந்த பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றும் வழக்கறிஞர் கூறினார். சிங்கப்பூரில் கொள்ளை குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts