TamilSaaga

“இணையத்தில் கசிந்த வாடிக்கையாளர்களின் தகவல்கள்” – பகிரங்க மன்னிப்பு கேட்ட StarHub

சிங்கப்பூரில் 57,191 ஸ்டார்ஹப் வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான அடையாள அட்டை எண்கள், மொபைல் எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் மேலும் சிங்கிள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் தற்போது இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 6 மாதங்களுக்கு முன்பு Singtel நிறுவன வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) வெளியான ஒரு அறிக்கையில், ஸ்டார்ஹப் அதன் இணையப் பாதுகாப்பு குழு ஜூலை 6ம் தேதி ஆன்லைன் கண்காணிப்பைச் செய்தபோது தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதை கண்டறிந்தது என்பர் கூறியுள்ளது. அந்த குழு தனது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைக் கொண்ட, சட்டவிரோதமாக பதிவேற்றப்பட்ட கோப்பை, மூன்றாம் தரப்பு தரவு திணிப்பு இணையதளத்தில் கண்டறிந்தது.

தற்போது இந்த தரவு கசிவுக்கு மன்னிப்பு கேட்ட ஸ்டார்ஹப்பின் தலைமை நிர்வாகி திரு. நிகில் ஈபன் “டேட்டா பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் தனியுரிமை ஆகியவை ஸ்டார்ஹப்பிற்கு முக்கியமான விஷயங்கள். நாங்கள் அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையாக இருப்போம்.

முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் அமைப்புகளைப் பாதுகாக்க தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய உடனடி மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஸ்டார்ஹப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts