சிங்கப்பூர் : பொதுவாக புதிதாக ஒரு இடத்திற்கு புதிதாக செல்லும் போதும் பல விதமான பிரச்சனைகள், சவால்களை சந்தித்து ஆக வேண்டி இருக்கும். இது போன்ற சவால்கள் சிங்கப்பூரிலும் நிறையவே இருக்கும். போலி ஏஜென்ட்கள் துவங்கி பலவிதமான சவால்களை தொடர்ந்து நாம் சந்திக்க வேண்டி இருக்கும்.
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் வரைக்கும், வந்த பிறகும் பல சவால்களை சந்திக்க வேண்டி இருக்கும். அப்படி என்னென்ன பிரச்சனைகளை தமிழர்கள் சந்திக்க வேண்டி இருக்கும்? அவற்றை சமாளிக்க என்னென்ன விஷயங்களை பின்பற்றலாம் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.
சிங்கப்பூர் வரும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் :
- சிங்கப்பூர் வரும் தமிழர்கள் சந்திக்கும் மிக முக்கியமான சவால் மொழி. இங்கு சீனர்கள் அதிகம் என்பதால் அவர்கள் உச்சரிக்கும் விதமும், இந்தியர்கள் உச்சரிக்கும் விதமும் மாறுபட்டதாக இருக்கும். இதனால் பல விஷயங்கள் புரியாமலும், தவறாக புரிந்து கொள்ளப்படும்.
- இன்ஜினியர், ஐடி துறையை சேர்ந்தவர்கள் தவிர மற்றவர்கள் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையே மொழி தான். மற்றவர்களுடன் சரியான முறையில் தொடர்பு கொள்ளும், பேசும் திறன் இல்லாதது தமிழர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாகும்.
- சிங்கப்பூரில் தங்குவதற்கான அறைகள் கிடைப்பது மிக மிக சிரமமான விஷயம். அப்படியே நமக்கு கட்டுப்படியாகிற விலையில் அறைகள் கிடைத்தாலும் அதில் 3 அல்லது 4 பேருடன் பகிர்ந்து பங்கும் நிலை இருக்கும்.
- இந்தியாவில், அதுவும் தமிழகத்தில் கிடைப்பது போன்று சுவையான உணவு கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தால் அது கண்டிப்பாக கிடைக்காது. அப்படி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அதிகமான தொகை செலவிட வேண்டி இருக்கும்.
- சிங்கப்பூரில் அடிப்படை சம்பளத்தில் வேலைக்கு வந்திருப்பவர்களுக்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையில் வேலைக்கு வந்திருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதாவது அவர்கள் வேலை நேரம் போக கூடுதலாக OT பார்த்தால் மட்டுமே அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
- சிங்கப்பூர் வரும் தமிழர்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று இங்குள்ள போக்குவரத்து உள்ளிட்ட விதிமுறைகளை புரிந்து கொள்வது தான்.
சவால்களை சந்திக்க எளிய டிப்ஸ் :
- சிங்கப்பூர் வரும் தமிழர்கள், மற்றவர்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்ற திறமையை வளர்த்துக் கொண்டு சிங்கப்பூர் வந்தால் அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
- சிங்கப்பூரில் அறைகள், உணவு உள்ளிட்டவைகளுக்கு ஆகும் செலவுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் வாழ்க்கையை வாழ பழகிக் கொள்ளலாம்.
- சிங்கப்பூரில் நல்ல உணவு கிடைப்பதற்காக அதிக தொகை செலவிட வேண்டி இருக்கும் என்பதால், தேவையான பொருட்களை வாங்கி வந்து, வீட்டிலேயே சமையத்து உண்ணுவது மிக சிறந்த வழியாகும்.
- சிங்கப்பூரில் போக்குவரத்து விதிமுறைகள் உள்ளிட்ட என்ன விதிமுறைகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு சிங்கப்பூர் வருவதால் இங்கு வந்த பிறகு பல விதமான சிக்கல்களில் சிக்கிக் கொள்வதை தவிர்க்க முடியும். குறிப்பாக டிரைவர்களுக்கான போக்குவரத்து விதிமுறைகள், பொது மக்களுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை தெரிந்து கொள்வது சிறப்பானது.