TamilSaaga

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமா அல்லது விலை குறையுமா நிபுணர்களின் கணிப்பு?

சிங்கப்பூர் : உலகிலேயே தங்கம், குறைந்த விலையில் விற்கப்படும் நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. துபாய், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக தங்கம் வாங்குவதானாலும் சரி, தங்கத்தில் முதலீடு செய்வது ஆனாலும் சரி சிங்கப்பூர் சிறந்த நாடு தான்.

ஆனால் கடந்த சில நாட்களாக சிங்கப்பூரில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல தங்கத்தின் விலை தற்போது சிங்கப்பூரிலும் அதிகம் தான். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 டாலர் வரை உயர்ந்துள்ளது. மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.6235.2 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.6802 ஆகவும் உள்ளது.

அதுவே சிங்கப்பூரில் மார்ச் 31 ம் தேதி காலை நேர நிலவரப்படி, ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 93.70 சிங்கப்பூர் டாலராகவும், 24 காரம் தங்கத்தின் விலை 103.80 சிங்கப்பூர் டாலர்களாகவும் இருந்தன. ஒரு சவரன் தங்கத்தின் (22 காரட்) விலை 749.60 டாலர்களாகும். ஒரு சவரன் 24 காரட் தங்கத்தின் விலை 830.40 டாலர்களுக்கு விற்பனையாகிறது. கடந்த 7 நாட்களில் விற்கப்படும் அதிகபட்சம் விலை இதுவாகும். மார்ச் 25ம் தேதி சிங்கப்பூரில் ஒரு சவரன் தங்கம் 724.80 டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இனி வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2024 ம் ஆண்டு துவங்கி, 2030 ம் ஆண்டு தங்கம் விலை படிப்படியாக தொடர்ந்து அதிகரிப்பதற்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக சிங்கப்பூர் டாலரின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதே தங்கத்தின் விலை அதிகரிப்பிற்கான முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் ஒரு ounce தங்கத்தின் விலை 2652 டாலர்கள் வரை உயருவதற்கும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

2024 ம் ஆண்டு மட்டுமல்ல இன்னும் 5 ஆண்டுகள் வரை உலக அளவில் தங்கத்தின் விலை ஏறுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தின் மத்தியில் உள்ள ஒரு வாரத்தில் சற்று குறைந்தால் மீதமுள்ள 3 வாரங்களும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து, உச்சம் தொடுவதற்கே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஏப்ரல் மாத துவக்கத்தில் ஒரு ounce 2255 டாலர்களாக இருந்து, ஏப்ரல் மாத இறுதியில் 2488 வரை அதாவது 21.2 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். மே மற்றம் ஜூன் மாதங்களில் தங்கம் விலை உயர்வு ஓரளவு கட்டுக்குள் இருக்கும் என்றும், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக 32 சதவீதம் வரை தங்கம் விலை உயர்ந்து ஒரு ounce தங்கத்தின் விலை 2722 டாலர்கள் வரை உயரவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts