TamilSaaga

சிங்கப்பூரில் 1,60,000 பேருக்கு 100 வெள்ளி மதிப்பிலான Vouchers : யாருக்கெல்லாம் வழங்கப்படும்? எப்போது? முழு விவரம்

சிங்கப்பூரில் தொற்றுநோய்க்கு மத்தியில் சுமார் 1,60,000 தகுதியுள்ள சிங்கப்பூரர்கள் தங்கள் வீட்டு செலவுகளுக்கு ஆதரவாக அடுத்த மாதம் 100 வெள்ளிமதிப்புள்ள மளிகை வவுச்சர்களைப் பெறுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு மற்றும் ஆதரவு தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

சிங்கப்பூரில் ஒன்று அல்லது இரண்டு அறைகள் கொண்ட HDB வீடுகளில் வசிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்கள் இல்லாத இந்த ஆண்டு 21 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள் இந்த voucherகளை பெற தகுதி உள்ளவர்களாக கருதப்படுவார்கள் என்று இன்று திங்களன்று (செப்டம்பர் 27) வெளியிட்ட ஒரு அறிக்கையில் சிங்கப்பூர் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மளிகை வவுச்சர்கள் திட்டம் தகுதியானவர்களுக்கு மொத்தம் சுமார் 63 மில்லியன் அளவிலான உதவியை வழங்கும்.

கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் 300 வெள்ளி அளவிலான வவுச்சர்களை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 2 முதல் அக்டோபர் முழுவதும் சனிக்கிழமைகளில் தகுதியான வீடுகளுக்கு வவுச்சர்கள் வழங்கப்படும். உதாரணமாக, சைனாடவுன், குயின்ஸ்டவுன் மற்றும் புக்கிட் மெராவில் உள்ள தகுதியான பயனாளர்கள், அக்டோபர் 2ம் தேதி தங்கள் வவுச்சர்களை வீடுகளில் இருந்த நிலையிலேயே பெறலாம்.

மேலும் வீட்டிற்கு voucher வழங்க வரும்போது ஆட்கள் இல்லை என்றால் எதிர்வரும் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 8 வரை வீடுகளுக்கு வந்து வழங்கப்படும் என்று MOF தெரிவித்துள்ளது. இரண்டாவது டெலிவரியையும் எடுக்க யாரும் இல்லை என்றால், 10 வேலை நாட்களுக்குள் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தில் பெறுநர்கள் தங்கள் வவுச்சர்களை சேகரிக்க ஒரு டெலிவரி அறிவிப்பு அட்டையை வீட்டு வாசலில் வைக்கப்படும்.

ஜெயண்ட், என்டியுசி ஃபேர்பிரைஸ், பிரைம் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷெங் சியோங் உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகளில் இந்த மளிகை வவுச்சர்களைப் பயன்படுத்தலாம்.

Related posts