TamilSaaga

கண்கள் நிறைந்த கனவுகளுடன் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற 23 வயது ஏழுமலை… திடீர் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கலங்கி நிற்கும் குடும்பம்!

தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரான பொன்ராமன் ஏழுமலை சிங்கப்பூரில் வேலை இடத்தில் நடந்த விபத்தில் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாத குடும்பம் மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கப்பூரில் கடந்த எட்டு மாதமாக வேலை செய்து வரும் ஏழுமலை கான்கிரீட் விசை குழாய் உதவியாளராக பணி செய்து வருகின்றார். கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு சுமார் 11.20 மணியளவில் விசை குழாய் டிரக்கில் உயிரிழந்ததாக குடும்பத்தினருக்கு. விபத்து நிகழ்ந்த உடனே அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் எனவும் காயங்கள் அதிகம் இருந்த காரணத்தினால் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஏழுமலையின் வருமானத்தினால் குடும்பத்தை வழிநடத்தும் அவரது உறவினர்கள் அவரது மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் கதறி அழுகின்றனர். உடனடியாக மருத்துவமனைக்கு இன்று இருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியும் எனவும் இனிமேல் இது போன்ற சம்பவம் ஏற்படாமல் கோரிக்கை விடுத்துள்ளனர். இவரது மரணத்தில் நடத்தப்பட்ட விசாரணையின் படி சந்தேகப்படும்படியான தகவல் எதுவும் கண்டறியப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts