TamilSaaga

பாதிக்கப்படும் வர்த்தகம் – ‘ஆதரவு நடவடிக்கைகளின் விவரங்களை விரைவில் அறிவிப்போம்’ – நிதி அமைச்சகம்

சிங்கப்பூரில் தற்போது கிருமி பரவல் அதிகரித்து வருவதால், நாட்டில் பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருக்கின்றன. நாளை ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வரையிலும் ஏற்கனவே தளர்வு அளிக்கப்பட்ட பல விஷயங்களுக்கு மீண்டும் கடினமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

குறிப்பாக உணவகங்களில் மக்கள் அமர்ந்து உணவு உண்ண தடை விதிக்கப்படுகிறது எனினும் பார்சல் மற்றும் டெலிவரி சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. உடற்பயிற்சி கூடங்கள், கல்விக்கூடங்கள், சமூக ஒன்று கூடல்கள், திரையரங்கம், அருங்காட்சியகம், சொகுசு கப்பல்கள் உள்ளிட்ட பல இடங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிங்கப்பூரின் நிதி அமைச்சகம் தனது முகநூல் மூலமாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் “சிங்கப்பூரில் பெருந்தொற்று பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தொழில் முனைவோர் மற்றும் தனிநபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்”.

“மேலும் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள், தங்களுக்கு அரசு தரப்பில் இருந்து என்ன உதவிகள் கிடைக்கும் என்று கேட்டுவருகின்றனர்”. இந்நிலையில் அவர்களுக்கு தேவையான ஆதரவு நடவடிக்கைகளின் விவரங்களை விரைவில் அறிவிப்போம்” என்று தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்ட முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

Related posts