TamilSaaga

புத்தாண்டிற்கு சிங்கப்பூர் கோவில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்… “என்னதான் வெளிநாட்டுக்கு சென்றாலும் புத்தாண்டிற்கு கோவிலுக்கு செல்வது ரத்தத்தில் உரிய ஒன்றாகும்”

சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அங்கு வாழும் தமிழர்கள் அனைவரும் கோவில்களுக்கும், மசூதிகளுக்கும், சர்ச்சுகளுக்கும் சென்று மனதார வேண்டிக் கொண்டனர். சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழ்வதால் கோவில்கள் எங்கும் கூட்டங்கள் நிறைந்து வழிந்தன. எல்லா கோவில்களிலும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றதால் பக்தர்கள் அனைவரும் வயிறார உணவு உண்டு மகிழ்ந்தனர்.

புத்தாண்டு அன்று மழை பல இடங்களில் விடாது பெய்த போதிலும் அதனை பொருட்படுத்தாது மக்கள் வழிபாட்டிற்காக ஒன்று கூடினர். இந்தியாவில் வாழும் சொந்தங்களும் சிங்கப்பூரில் வாழும் மக்களும் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்று வெடி கொண்டதாக பலரும் தங்கள் வேண்டுதலை சரியாக கூறினார் சிங்கப்பூரில் உள்ள முக்கிய கோவில்களான ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், ராமர் கோவில், தோபிகன்ட் முருகன் கோவில், பிள்ளையார் கோவில் என அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதின.

சர்ச்சுகளை பொருத்தவரை நள்ளிரவு இரண்டரை மணி வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. என்னதான் வெளிநாடுகளுக்கு சென்றாலும் பண்டிகை அல்லது நல்ல தினம் வரும்பொழுது இறைவனைச் சென்று வேண்டிக் கொள்ளும் பழக்கம் மக்களிடையே ஊறிப் போய் இருப்பது மகிழ்ச்சியான ஒன்றாகும்.

Related posts