TamilSaaga

சிங்கப்பூரில் தமிழ் பாட்டிற்கு டான்ஸ் ஆடி உலக அளவில் புத்தாண்டு கொண்டாடத்தை ட்ரெண்டாக்கிய தமிழக இளைஞர்கள்!

உலகம் முழுவதுமே 2024 ஆம் ஆண்டின் தொடக்கமான ஆங்கில புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றன. நள்ளிரவு 12 மணி ஒவ்வொரு நாட்டிலும் பிறந்த பொழுது அந்தந்த நாட்டினர் வானவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை உலக அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் தமிழகத்தின் திருப்பத்தூர் ஊரிற்கு அருகே உள்ள பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற 20 இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழ் பாட்டிற்கு நடனமாடி புத்தாண்டு கொண்டாடியுள்ள சம்பவம் வைரல் ஆகியுள்ளது.

சிங்கப்பூர் மக்கள் அனைவரும் வானவேடிக்கையுடன் புத்தாண்டினை வரவேற்று நடனமாடிய பொழுது இவர்கள் பிரபலமான பிரபுதேவா பாடலான “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா… பசங்க காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா“ என்னும் பாடலுக்கு குரூப்பாக டான்ஸ் ஆடி கலக்கியுள்ளனர். சொந்த பந்தங்களை பிரிந்து தனியாக இருக்கும் பொழுது இது போன்ற கொண்டாட்டங்கள் தான் அவர்களை தனிமையிலிருந்து விடுபடச் செய்யும்.

Related posts