TamilSaaga

பயணிகளுக்கு குஷியளிக்கும் தித்திப்பான செய்தி… பெங்களூரு- சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்!

கொரோனா நோய் தொற்றிற்கு பின்னால் விமான சேவையானது பழைய நிலைக்கு திரும்பி வருவதால் நிறுவனங்கள் தங்களது சேவையினை அதிகரிக்க முன்வந்துள்ளன. இந்நிலையில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் பெங்களூர் மற்றும் சிங்கப்பூருக்கு இடையே புதிதாக விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது.

நிறுவனம் அறிவித்ததன் படி பெங்களூரில் இருந்து இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு புறப்படும் விமானம் சுமார் 5.40 மணிக்கு சிங்கப்பூரை வந்தடையும் என தெரிவித்துள்ளது மற்றும் சாங்கி விமான நிலையத்திலிருந்து 6.40 மணிக்கு புறப்படும் விமானம் ஆனது பெங்களூருவிற்கு காலை 8.35 மணிக்கு வந்தடையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விமான சேவையானது திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ,ஞாயிற்றுக்கிழமை என நான்கு நாட்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் எனவும் தினசரி விமான சேவை அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தகவல்களை அறிய ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts