TamilSaaga

சிங்கப்பூரில் திடீரென பழுதான கேபிள் கார் பாதை.. உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கிய 18 பயணிகள் – என்ன நடந்தது?

கடந்த ஜூலை 27 அன்று இரவு சிங்கப்பூர் கேபிள் காரின் மவுண்ட் பேபர் லைன் பழுதடைந்ததால் 18 பயணிகள் அந்தரத்தில் தொங்கியபடி இருந்துள்ளார் என்று சீன ஊடகமான ஷின் மின் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சீன ஊடகம் பேட்டியளித்த பயணிகளில் ஒருவர் கூறுகையில், தைவானைச் சேர்ந்த தனது காதலியுடன் சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் அந்த கேபிள் காரில் சிக்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ஜாங் என்ற பயணி, தாங்கள் கேபிள் காரில் செல்வது இதுவே முதல் முறை என்றும், இரவு 9.15 மணியளவில் அது திடீரென நின்றபோது, ​ஒருவேளை இந்த ​லைன் மூடப்பட்டுவிட்டது போல என்று எண்ணி அஞ்சியதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும் கேபிள் கார் பழுதடைந்து நின்று வெகு சில நிமிடங்களில் ஒரு அறிவிப்பு அங்கு நிலவிய சூழ்நிலையை தெளிவுபடுத்தியது என்று ஜாங் மேலும் கூறினார். இறுதியில் அவர்கள் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் கேபிள் காருக்குள் சிக்கிக்கொண்ட பின்னர் பத்திரமாக தரையிறங்கியுள்ளனர்.

சிங்கப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான இணைய பாதுகாப்பு பயிற்சி.. தமிழிலும் நடத்தப்படும் வகுப்புகள் – முழு விவரம்

அந்த கேபிள் கார் பல முறை முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர்ந்ததாகவும், இரவு 9.15 மணிக்கு நின்ற அந்த கேபிள் கார் இரவு 10.30 மணிக்கு தான் நிலையத்திற்குத் திரும்பியதாகவும் ஜாங் கூறினார். ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மவுண்ட் பேபர் லீஷர் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரவு 9.14 மணியளவில் மவுண்ட் ஃபேபர் கேபிள் கார் பாதையில் கோளாறு ஏற்பட்டது என்று கூறினார்.

30 நிமிடங்களில் கோளாறு சரி செய்யப்பட்டு பயணிகள் 18 பேரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டதாகவும் கடைசி பயணி 10.55 மணிக்கு இறக்கிவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts