சிங்கப்பூரில் குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களிடம் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் எனப்படும்( என் டி யு சி )நடத்திய ஆய்வில் பெரும்பாலான ஊழியர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். அதில் சில ஊழியர்கள் தங்களது வேலை நினைத்து பெருமைப்படுவதாக கூறியிருந்தாலும் 25 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலையில் அவமானத்தை சந்திப்பதாக கூறியுள்ளனர்.
வேலையின் தன்மை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் குறைவான ஊதியம் ஆகியவற்றின் காரணமாக சமுதாயத்தில் அவமானத்தை சந்திப்பதாக கூறியுள்ளனர். பெரும்பாலும் துப்புரவு தொழிலாளர்கள், உணவு விநியோக ஓட்டுநர்கள், உணவுத்துறையில் வேலை செய்பவர்கள் போன்றோர் தங்களது வேலையில். பல இன்னல்களை சந்திப்பதாக கூறியுள்ளனர்.
இதன் மூலம் அதிபர் தர்மன் சமூக ரத்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் முக்கியமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்து ஐந்து ஆண்டுகளில் குறைவான வருமானம் ஈட்டும் பெரும்பாலான தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதாவது பிராக்ரசிவ் வேக் மாடல் என்னும் திட்டத்தின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம். படிப்படியாக உயர்த்தப்படும் எனக் கூறியுள்ளார்.
மேலும் கல்விப் பின்னணியை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தொழிலாளர்களின் திறமை மற்றும் முயற்சியை மதிப்பது முக்கியம் என கேட்டுக் கொண்டுள்ளார்.