சிங்கப்பூரில் டிரைவர் ஆக வேலை பார்ப்பவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதிலும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் டிரைவராக வேலை பார்க்கின்றனர்.
இந்நிலையில், டிரைவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட உள்ளது சிங்கப்பூர். அதாவது லாரிகள் சிலவற்றில் கட்டாய வேகவரம்பு சாதனம் பொருத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றது.
கடந்தாண்டு மார்ச் மாதமே இது குறித்த தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த ஆண்டிற்குள் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும் என்று தற்பொழுது தெரியவந்துள்ளது.
சராசரி எடை 3500 கிலோவிற்கு மேல் லோடு ஏற்றும் லாரிகளில் வேகவரம்பு சாதனம் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதன் மூலம் லாரிகள் விபத்துக்குள்ளாவது தடுக்கப்படும் என்றும் அத்தகைய வாகனங்களில் பெரும்பாலும் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் உயிரினங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் எனவும், சாலை பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் லியோன் பெரோரா என்பவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
எனவே, ஏகவரம்பு சாதனங்களை விரைவில் பொருத்துவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தவும், அதனை விரைவில் அமல் படுத்தவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் ஃபைசல் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
சோதனையை மேற்கொண்டு அதனை அமல்படுத்த சிறிது கால அவகாசம் தேவை எனவும், அதன் பின்பு இந்த விதிமுறை அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். இந்த சட்டமானது அமலுக்கு வரும் நிலையில் டிரைவராக பணிபுரியும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலருக்கும் இது உதவியாக இருக்கும்.