TamilSaaga

தாயின் கழுத்தில் வழிந்த ரத்தம் : திடுக்கிட்டுப்போன மகன் – சற்று நேரத்தில் பரபரப்பான சிங்கப்பூர் Yishun பகுதி

சிங்கப்பூரில் நேற்று செவ்வாய் கிழமை (மார்ச் 1) பிற்பகல் Yishun பகுதியில் உள்ள பாதுகாப்பான இணைப்புப்பாதையின் கூரையின் ஒரு பகுதியில் இருந்த பிளாஸ்டர் போர்டு ஒன்று கீழே விழுந்ததில் 52 வயது பெண் ஒருவர் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. Yishun பகுதி குடியிருப்பாளரான, திருமதி Xu Bei Yu மற்றும் அவரது மகன், Yishun தெரு 22ன் பிளாக்ஸ் 272 மற்றும் 275 க்கு இடையேயான இணைப்புப்பாதையின் கீழ் நடந்து கொண்டிருந்தபோது, ​​​​பிளாஸ்டர் போர்டு துண்டு கீழே விழுந்து அவரை காயப்படுத்தியது என்று சீன செய்தித்தாள் ஷின் மின் டெய்லி நியூஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வருகை பதிவுக்கான ஊக்கத்தொகை” : Sick Leave எடுப்பவர்களை பாதிக்கிறதா? சிங்கப்பூரில் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் MOM

அப்போது வானிலை நன்றாக இருந்ததாகவும், மழை எதுவும் பெய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த அந்த பெண்மணியின் 23 வயது மகன், தனது தாயின் கழுத்தில் ரத்தம் வழிவதைக் கண்டு திடுக்கிட்டார். உடனே துரிதமாக செயல்பட்டு அவர் ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் அந்த பெண்மணியை உடனடியாக அருகில் இருந்த கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது.

அந்த பெண் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் மருத்துவமனையை விட்டு நலமடைந்து வெளியேறினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணிற்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்படாத காரணத்தால் தலையில் தையல் தேவையில்லை என்றும்,, ஆனால் தோளில் கீறல்கள் ஏற்பட்டிருந்தது என்று ஷின் மின் தெரிவித்தார். தலைச்சுற்றல் அல்லது வாந்தி போன்ற விஷயங்கள் தனக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த மருத்துவமனைக்கு அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஒரு வாரம் வரை அவரது உடல்நிலையை கவனிக்கும்படியும் கூறப்பட்டுள்ளது.

சர்வ நாடியையும் ஒடுங்க வைக்கும் “சிங்கப்பூர் பிரம்படி”.. மணிக்கு 160 கி.மீ வேகம்.. 4 அடிக்கே “Buttocks” சதை கிழிவது உறுதி!

லாஜிஸ்டிக் டிரைவரான திருமதி சூ, தினசரி மாலையில், அருகில் உள்ள கடைகளுக்குச் செல்வதற்கு அந்த நடைபாதையை அடிக்கடி பயன்படுத்துவேன் என்று கூறியுள்ளார். மேலும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்ல அந்த வழித்தடத்தை பயன்படுத்துவார்கள் என்றும் கூறினார் அவர். சம்பவம் நடந்த இடத்திற்கு ஊடகங்கள் சென்றபோது உடைந்த ஜிப்சம் பலகையின் இரண்டு பெரிய துண்டுகள் (ஒவ்வொன்றும் சுமார் 50 சதுர செமீ அளவு)அருகில் உள்ள ஒரு தொட்டியில் காணப்பட்டன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts