TamilSaaga

சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர் பணிக்கு அறிவிக்கப்பட்ட காலியிடம்… வெளிநாட்டினரை பணியமர்த்த அரசு உத்தரவு!!

சிங்கப்பூரில் தமிழாசிரியர் பணிக்கு, வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்கலாமா என்பது குறித்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த டிசம்பர் 2022 வரை சிங்கப்பூர் நாட்டினர் அல்லாத மற்ற நாட்டைச் சேர்ந்த 24 பேர் தமிழ் ஆசிரியர்களாக வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலான எண்ணிக்கையினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களே. மேலும் அந்த 24 பேரும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு சிங்கப்பூர் நாட்டினர் அல்லாமல் வேறு நாட்டினை சேர்ந்தவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வாய்ப்பு உள்ளதா என்னும் கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது.

இந்நிலையில் அதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் சான்சுன், சிங்கப்பூரில் ஆசிரியர் பணிக்கு சிங்கப்பூர் நாட்டினை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், தமிழ் ஆசிரியர்கள் சிங்கப்பூரில் இல்லாத பட்சத்தில் வெளிநாட்டினை சேர்ந்த தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவி.

சிங்கப்பூர் அரசு ஆனது ஆசிரியர் வேலைக்கு மேம்பட்ட திறன் கொண்டவர்களை வேலைக்கு சேர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது என்று அவர் தெரிவித்தார். எனவே தமிழ் உள்ளிட்ட ஒரு சில பாடங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

உள்நாட்டில் வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில், வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். வெளிநாட்டில் இருந்து ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது அவர்கள் அனுபவம், மற்றும் கற்பிக்கும் ஆற்றல் அவற்றை கடுமையாக பரிசோதித்த பின்னரே வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

எனவே சிங்கப்பூரில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்கள் ஆனால், உங்களது தகுதியை மேம்படுத்தி, ரெஸ்யூம் இணை தயார்படுத்தி வைத்துக் கொள்ள இது சரியான காலகட்டமாகும்.

Related posts