சிங்கப்பூரில் சென்று எப்படியாவது வேலை வாங்கி விட வேண்டும் என்பதுதான் நம் நாடுகளில் வாழும் பல இளைஞர்களின் கனவு. அப்படி சிங்கப்பூர் செல்வதற்கு, படித்த படிப்பிற்கான வேலையினை ஆன்லைனில் அப்ளை செய்துவிட்டு பதிலே கிடைக்காமல் திரும்பவும் ஏஜெண்டுகளை நம்பி இங்கு வரவேண்டிய நிலை தான் ஏற்படுகின்றது.
ஆனால் ஏஜெண்டுகளுக்கு ஒரு லட்சம் அல்லது அதிகபட்சமாக 2 லட்சம் என்று செலுத்திய காலம் போய் இன்று 5 லட்சம், ஆறு லட்சம் மற்றும் ஏழு லட்சம் என்று லட்சங்களுக்கு மதிப்பில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது.
அப்படி இருக்கும் பொழுது, நாம் எதை நம்பி ஏஜென்ட்களிடம் பணம் கட்டுவது? ஏனென்றால் கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் குருவி போன்று சிறுக சிறுக சேமித்த பணத்தை நம் பெற்றோர்கள் நமக்காக செலவு செய்ய இருக்கின்றனர்.
நீங்கள் ஏஜென்டிடம் பணம் கட்டும் பொழுது சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்களுக்கான வேலையினை ஆன்லைனில் அப்ளை செய்துவிட்டு, அந்த விசாவானது அப்ரூவல் என்ற ஸ்டேட்டஸ் வந்தவுடன் நீங்கள் பணம் கட்டினால் போதுமானது.
அதற்கு முன் சிறிது பணம் கேட்க வாய்ப்பு உண்டு. அதை அப்ளிகேஷன் ப்ராசஸ் என்று சொல்லுவர். அதை தவிர நீங்கள் முழு பணம் கட்டுகிறீர்கள் என்றால் கீழ்கண்ட வெப்சைட்டை கிளிக் செய்து உங்களது விசாவிற்கான ஸ்டேட்டஸ் என தெரிந்து கொள்ளுங்கள்.
- https://www.mom.gov.sg/ என்ற வெப்சைட்டிற்குள் செல்ல வேண்டும்.
- Check application status online என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- Select your language- என்பதில் நீங்கள் தேவையான மொழியினை கிளிக் செய்து continue கொடுக்க வேண்டும்.
- அதில் Pass status என்று இருக்கும். அதற்கு முன் By continuing, I declare that I agree to the terms of use என்று இருக்கும். அதனை கிளிக் செய்த பின்பு Pass status என்ற பேச்சுக்கு உங்களை அழைத்துச் செல்லவும்.
- அதில் உங்களது டேட் ஆப் பர்த் மற்றும் உங்களது பாஸ்போர்ட் நம்பர் ஆகியவற்றினை பதிவு செய்து submit கொடுக்கவும்.
- உங்கள் பாஸ் அப்ளை செய்த மூன்று நாட்களுக்குள், எந்த தேதியில் அப்ளை செய்யப்பட்டது, அதற்கான ஸ்டேட்டஸ் என்ன என்பதை பற்றி முழு விவரம் உங்களுக்கு கிடைத்துவிடும்.
இந்த விவரங்களை சரிபார்த்த பின் உங்களது ஏஜென்டிடம் நீங்கள் தைரியமாக பணத்தினை கட்டலாம்.