TamilSaaga

பலரின் கனவாக இருக்கும் MBS-ல் திறக்கப்பட்டிருக்கும் புதிய வேலை வாய்ப்புகள் என்ன? எப்படி Apply செய்யலாம்?

இந்த மெரீனா பே சாண்ட்ஸ் சிங்கப்பூரில் உள்ள மெரினா பே -விற்கு எதிரில் அமைந்துள்ள ஒருங்கிணைக்கப்பட்ட ரிசார்ட் ஆகும். மெரீனா பே சாண்ட்ஸ் -ல் பலவிதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறது. இது சிங்கப்பூரின் அடையாளமாக திகழ்வதோடு வெளிநாட்டு பயணிகளுக்கு இது ஒரு சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. சிங்கப்பூருக்கு வருபவர்கள் இந்த மெரீனா பே சாண்ட்ஸ் -சை சுற்றி பார்க்காமல் திரும்ப மாட்டார்கள். வெளிநாட்டு பயணிகள் மட்டுமல்லாமல் சிங்கப்பூரை சேர்ந்தவர்களும் இதனை ஒரு பொழுதுபோக்கு ஸ்தலமாக கருதுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறை தினங்களை கழிக்க ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. அனைத்து விதமான பொழுது போக்கு அம்சங்களை விரும்புவர்களுக்கு இந்த மெரீனா பே சாண்ட்ஸ் எல்லா வகையிலும் திருப்தி அளிக்கிறது.

இந்த ரிசார்ட் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதில் தற்போது 2,500 ஹோட்டல் ரூம்களும் மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ரிசார்ட் -இனுள் மால், அருங்காட்சியகம், தியேட்டர்கள், பிரபல சமையல்காரர்களின் உணவகங்கள், மிதக்கும் கிரிஸ்டல் பெவிலியன்கள் இரண்டு, கலை-அறிவியல் கண்காட்சிகள் மற்றும் உலகின் மிகப்பெரிய கேசினோ இருக்கிறது. இது மட்டுமல்லாமல் ஷாப்பிங் செய்ய கடைகளும், உணவகங்களும் இங்கு நிறைந்து இருக்கின்றன. குழந்தைகள் விளையாட இங்கு நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் நீச்சல் குளங்களும் இருக்கின்றது. இதனால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இங்கு தங்களுடைய நாள் பொழுதை மறக்க முடியாத தருணங்களாக மாற்றலாம்.

பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல் வணிக ரீதியாக சிங்கப்பூருக்கு வருபவர்கள், இந்த இடத்தில் மீட்டிங் ஹால், இன்சென்ட்டீஸ் என பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. 45 ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட ஹாலும் இங்கே இருக்கிறது. அதனால் இங்கே மிகப் பெரிய பிரம்மாண்டமான மீட்டிங் மற்றும் வர்த்தக பேச்சு வார்த்தைகள் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கிறது. இவ்வளவு பெரிய ரிசார்ட்டில் அனைத்து விதமான துறைகளும் நேர்த்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் சரியாக செயல்பட அதற்குரிய பணியாளர்களை நியமித்திருப்பதால் மட்டுமே. ஒவ்வொரு ஆண்டும் மெரீனா பே சாண்ட்ஸ் -ல் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். அதேபோல் இந்த ஆண்டும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இது ஒரு மிகப்பெரிய நிறுவனம் என்பதால் அனைத்து துறை சார்ந்த வேலைகளும் இங்கு இருக்கிறது. இதனால் தாங்கள் எந்த துறையில் இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு அந்த துறை சார்ந்த வேலை இந்த நிறுவனத்தில் இருக்கிறதா என்பதை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மெரீனா பே சாண்ட்ஸ் -ல் வேலை கிடைத்தால், பணியாளர்கள் என்னென்ன சலுகைகளை அனுபவிக்கலாம். மெரீனா பே சாண்ட்ஸ் அதன் பணியாளர்களுக்கு நிறைய சலுகைகளை வழங்குகிறது. இதன் காரணமாக அங்கு வேலை செய்பவர்கள் மிகவும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் தங்களுடைய பணிகளை கவனிக்கிறார்கள். மற்ற நிறுவனங்களை காட்டிலும் இங்கு கூடுதலாக சலுகைகள் தரப்படுவதால் பலர் இங்கு வேலை கிடைக்க விரும்புகிறார்கள்.

அப்படி என்ன சலுகைகள் எங்கே இருக்கிறது என்று பார்ப்போம். இங்கு பணியாற்றுபவர்களுக்கு, ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஹெல்த் இன்சூரன்ஸ் மூலம் மருத்துவ செலவுகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்றவற்றிற்கு நீங்கள் செலவு செய்த தொகையை திரும்ப பெறலாம். இங்கு வேலை செய்பவர்களுக்கு வேலை அல்லாத மற்ற நேரங்களில் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி நடத்தப்படுகிறது. பணியாளர்களுக்கு என்று தனியாக சலுகை உண்டு அதை பயன்படுத்தி அவர்கள் உணவருந்துவது முதல் ஷாப்பிங் வரை செய்யலாம். குறிப்பிட்ட அளவு தள்ளுபடிகளும் உண்டு. அதுமட்டுமின்றி வேலை செய்பவர்களுக்கு இலவச உணவு உண்டு. இரவில் வேலைக்காக பயணிக்க நேர்ந்தால், போக்குவரத்து வசதிகளை நிறுவனமே ஏற்கும். விடுப்பு நாட்களும் மற்ற நிறுவனங்களை விட இன்று அதிகம். ஆண்டு விடுப்புகளும் இங்கு கிடைக்கும்.தேவையான போது தேவையான பணியாளர்களுக்கு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அவர்களுடைய திறன்களை மேம்படுத்துகின்றனர். நிறுவனங்களை ஒப்பிடுகையில் இங்கு வருமானம் சற்று அதிகமாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் பணியாற்ற இவைகளே போதுமான காரணங்களாக இருக்கும். எனவே மெரீனா பே சாண்ட்ஸ் -ல் உங்களுக்கு ஏற்ற வேலை இருக்கிறதா என தேடி உடனடியாக சேரலாம். தற்போது, என்னென்ன மாதிரி வேலைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

இங்கு அனைத்து விதமான வேலைகள் அதாவது, முழு நேர வேலை, பகுதி நேர வேலை, இன்டெர்ன்ஷிப், காண்ட்ராக்ட் வேலைகள், கேஷுவல் டைப் வேலைகள், டெம்ப்ரவரி வேலைகள் இருக்கிறது. உங்களுக்கு எது போன்ற வேலையில் சேர வேண்டுமோ அதை செலக்ட் செய்து உள்ளே சென்று பார்க்கவும்.

கட்டுமான துறை சார்ந்த 13 வேலை வாய்ப்புகள் இருக்கின்றது. இதில் கட்டுமானம் மட்டுமல்லாமல் எலக்ட்ரிக்கல் வேலைகளும் இருக்கின்றது. செக்யூரிட்டி சர்வீஸ் மொத்தம் ஏழு வேலை வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி பேக் ஆஃபீஸ், பிரண்ட் ஆஃபீஸ் என பல்வேறு வேலைகளும் கொட்டி கிடக்கின்றன. மெயில் டிஸ்பேச்சர், சூப்பர்வைசர், அட்மினிஸ்ட்ரேட்டர் என துறை சார்ந்த வேலைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு வேலைகளுக்கும் requirements இருக்கிறது, அதை நீங்கள் சமன் செய்கிறீர்களா என அறிந்து குறிப்பிட்ட வேலைக்கு இணையதளம் மூலமாக அப்ளை செய்யலாம். உடனடியாக மெரீனா பே சாண்ட்ஸ் கரியர் https://careers.marinabaysands.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும், தங்களுக்கு உகந்த வேலையில் தேர்வு செய்யவும்.

தங்களுக்கான வேலையை தேர்வு செய்து அப்ளைன் நவ் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்தவுடன், இந்த வேலைக்கான முழு விவரங்கள் அதாவது ஜாப் டிஸ்கிரிப்ஷன், job scope மற்றும் job requirements பற்றி முழுமையாக பார்க்க முடியும். அதை தெளிவாக படித்தபின், உங்களுக்கான வேலை இதுதான் என்று தெளிவடைந்த உடன், விண்ணப்பிக்க கடைசி தேதி பார்க்கவும். எல்லாவற்றும் சரியாக இருந்தால், அப்ளை நவ் எனும் ஆப்ஷன் தேர்வு செய்து உள்ளே நுழைய வேண்டும். உங்களுடைய ஈமெயில் ஐடி பூர்த்தி செய்து, மேலும் பல விவரங்களை கேட்கும். அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின் உங்களுடைய ரெஸ்யூமே அப்லோட் செய்து வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் உங்களுக்கு அதற்கான பதில் இமெயில் வரும். பின்னர் நிறுவனம் உங்களுடைய விண்ணப்பத்தை பரிசளித்து பதில் தெரிவிக்கும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க! சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts