TamilSaaga

சிங்கப்பூருக்கு வேலைக்கு வர எந்தெந்த பாஸ்களுக்கு எவ்வளவு ஏஜென்ட் பீஸ் கட்ட வேண்டும்? ஒரு தெளிவான ரிப்போர்ட்.. இதுக்கு மேல ஒரு பைசா கொடுக்க முடியாதுன உங்க ஏஜென்டிடம் நேரடியாகவே சொல்லலாம்!!

எப்படியாவது சிங்கப்பூரில் ஒரு வேலை வாங்கி விட வேண்டும் என்று தவிக்கும் இளைஞர்கள் நம் நாடுகளில் ஏராளம். ஏன் நம் வீட்டில் இருப்பவர்கள், நம் உறவினர்கள் மற்றும் நம் நண்பர்கள் கூட இந்த லிஸ்டில் இருக்கலாம்.

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருவதற்கு அனைவரும் தயங்குவதற்கு முதல் காரணம் ஏஜென்ட் பீஸ். நம் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் 6 லட்சம், 7 லட்சம் என ஏஜென்ட் பீஸ் கட்டி சிங்கப்பூருக்கு வரும் பொழுது, பொருளாதார ரீதியில் பின்தங்கி இருப்பவர்கள் அதை ஒரு கனவாக மட்டுமே பார்க்கின்றனர்.

உண்மையில் நீங்கள் சிங்கப்பூருக்கு ஏஜென்ட் மூலம் வரவேண்டும் என்று நினைத்தால்,இரண்டாம் கட்டஏஜெண்டுகளை தவிர்த்து, நல்ல ஏஜென்சி எதுவென்று விசாரித்து அங்கு நேரடியாக செல்வது சிறந்தது. ஏனென்றால் இரண்டாம் கட்ட ஏஜென்ட்கள் எனப்படும் ஏஜெண்டுகளுக்கு கீழே செயல்படும் நபர்கள் உங்களிடம் இருந்து இரண்டு முதல் மூன்று லட்ச ரூபாய் பணத்தினை சுருட்ட வாய்ப்பு உண்டு.

உண்மையில் எந்தெந்த பாஸ்க்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் என்பதை பார்க்கலாம். TEP பாஸ் எனப்படும் பாஸ் மூலம் நீங்கள் சிங்கப்பூருக்கு வந்தீர்கள் என்றால் மூன்று மாதங்கள் வேலை பார்க்கலாம், எனவே அந்த வகையான பாஸ்க்கு நீங்கள் 1,60,000 வரை ஏஜென்சிஸ் கட்டினாலே போதுமானது. இதில் ஆறு மாத பாஸ் என்றால் நீங்கள் 2 லட்சம் வரை பணம் கட்டலாம்.

அடுத்தது TW எனப்படும் பாஸ். இந்த பாஸ் மூலம் அதிகபட்சம் ஆறு மாதம் காலம் மட்டுமே வேலை பார்க்க முடியும் என்பதால் இதற்கு 2.15 லட்சம் ரூபாய் மட்டுமே ஏஜென்ட் பீஸ் கட்டினால் போதுமானது. S-PASS பொருத்தவர 4,70,000 வரை ஏஜெண்ட் பீஸ் கட்டலாம் மேலும் E-PASS பொருத்தவரை 5.50 லட்சம் வரை பணம் செலுத்தலாம்.

வொர்க் பெர்மீட்டிற்கு, மெடிக்கல் செலவு மற்றும் டிக்கெட் என அனைத்தும் சேர்த்து 5 லட்சம் பணம் கட்டினால் சரியாக இருக்கும். இந்த தகவல் யாவும் சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு நம்பகமான ஏஜென்சி மூலம் கிடைக்கப்பட்ட தகவல். முக்கியமான தகவல் என்னவென்றால் நீங்கள் எந்த வேலைக்கு செல்கின்றீர்களோ அந்த வேலைக்கான சம்பளம் எவ்வளவு என்று ஏஜென்டிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் சம்பளத்தில், அதிகபட்ச இரண்டு மாத சம்பளத்தினை ஏஜென்ட் பீஸ் ஆக கொடுத்தால் போதுமானது.சில ஏஜென்ட்கள் பெர்மிட்டியில் ஒரு சம்பளத் தொகை மற்றும் நிஜத்தில் ஒரு சம்பளத்தொகை என்று இருவகையான சம்பளத்தொகை சொல்வார்கள். அதையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மொத்தம், மேற்கண்ட தகவல்களை நினைவில் வைத்துக் கொண்டு இவ்வளவுதான் பணம் கட்ட முடியும் என்று உங்கள் ஏஜென்டிடம் தைரியமாக சொல்லலாம். இந்த தகவல் சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் உங்கள் நண்பர்கள் பலருக்கு உதவியாக இருக்கலாம்.

Related posts