நமது சிங்கப்பூரின் SHANYI தனியார் நிறுவனத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் பிரிவில் பஞ்சாபகேசன் மதிவாணன் எனும் ஊழியர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் Tekka Market அருகே நேற்று (மே.28) பர்ஸ் தொலைந்துவிட்டது.
அதில் அவரது ஒர்க் பெர்மிட் உட்பட சில முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது. எனினும், சில தமிழக ஊழியர்கள் அந்த பர்ஸை கண்டெடுத்து போலீசிடம் கொடுத்திருக்கின்றனர்.
ஆனால், அவர்கள் வீராச்சாமி சாலையில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பர்ஸை ஒப்படைக்க சொன்னதாக தெரிகிறது. எனினும், சம்பந்தப்பட்ட நபர்கள் இதுவரை அந்த காவல் நிலையத்தில் பர்ஸை கொடுக்கவில்லை என்று நம்து “தமிழ் சாகா”-விடம் பஞ்சாபகேசன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, பர்ஸை கண்டெடுத்தவர்கள் அதனை காவல் நிலையத்திலோ அல்லது +65 8904 2036 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கலாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அந்த பர்ஸில் டிரைவிங் லைசன்ஸ், ஒர்க் பெர்மிட் ஆகியவை இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், பர்ஸை எடுத்தவர்கள் இன்னமும் காவல் நிலையத்தில் அதனை ஒப்படைக்கவில்லை என்றும், தயவு செய்து இந்த செய்தியை படித்த பிறகாவது காவல் நிலையத்திலோ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள நம்பருக்கோ அழைக்க வேண்டுவதாகவும் கூறியுள்ளனர்.