TamilSaaga

பணம் கொடுக்காமல் சிங்கப்பூரில் வேலைக்கு வர “மிகப்பெரிய வாய்ப்பு”!

சிங்கப்பூருக்கு வேலைக்கு வர வேண்டுமெனில், ஏஜெண்ட்ஸ் மூலமாக மட்டுமே பெரும்பாலானோர் வர முடியும் என்பது எழுதப்படாத விதி. அதை மாற்றவும் முடியாது. ஏனெனில், சிங்கப்பூரில் உள்ள கம்பெனிகளை தங்கள் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களை நிரப்ப ஏஜென்ட்டுகளையே சார்ந்திருக்கின்றன.

சிங்கப்பூரில் உள்ள ஏஜென்ட்டுகள், இந்தியாவில் உள்ள ஏஜென்ட்டுகளுக்கு இந்த Project-ஐ கொடுத்து, ஆட்களை தேர்வு செய்கின்றனர். இதுதான் இந்நாள் வரை ஃபாலோ செய்து வரப்படும் நடைமுறையாகும்.

எனினும், சிங்கப்பூருக்கு ஏஜென்ட்டுகள் துணையின்றி நேரடியாகவும் வேலைக்கு வர முடியும் என்று நாம் சொல்லி வருகிறோம். நேரடியாக வேலைவாய்ப்புத் தளங்களில் அப்ளை செய்வதன் மூலம், நிச்சயம் நமக்கான நல்ல வேலையைத் தேடிக் கொள்ள முடியும்.

அப்படி, நீங்களே உங்களது வேலையை தேர்வு செய்யும் வகையில், உற்ற தோழனாக கைக்கொடுக்கிறது “FastJobs” எனும் வேலை வாய்ப்புக்கான இணையதளம்.

https://www.fastjobs.sg/ எனும் இந்த இணையத்தளத்தின் பக்கம், சிங்கப்பூர் நிறுவனங்களில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் உங்கள் கண் முன்னே நிறுத்துகிறது. இதன் மூலம், சிங்கப்பூரில் நீங்கள் விரும்பும் கம்பெனியில், உங்கள் படிப்பு ஏதுவான வேலையை நீங்களே கண்டறியலாம்.

அப்ளை செய்வது எப்படி?

https://www.fastjobs.sg/ என்ற லிங்கை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

பிறகு, Search Fast Jobs எனும் இடத்தில், நீங்கள் என்ன வேலைக்கு போக விரும்புகிறீர்களோ, அதை டைப் செய்து கொள்ளுங்கள். (எ.கா) டிரைவர் வேலை தேடுகிறீர்கள் என்றால், ‘Driver’ என்று அங்கு டைப் செய்யுங்கள்.

அதன் பிறகு, Location எனும் இடத்தில், சிங்கப்பூரில் எந்த இடத்தில்.. அதாவது சிங்கப்பூரின் எந்த பகுதியில் நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். உதாரணமாக, Changi பகுதியில் உள்ள கம்பெனிகளில், டிரைவர் வேலை தேடுகிறீர்கள் என்றால், அது தொடர்பான வேலை வாய்ப்புகளை மட்டும் உங்களால் பார்க்க முடியும்.

சாதாரண வேலை தொடங்கி, அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் வரை இங்கே உங்களால் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, நீங்கள் அந்த வேலைகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்.

நீங்கள் எந்த கம்பெனியில், என்ன வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, அதில் உங்கள் Resume-ஐ அப்லோட் செய்து Submit பட்டனை அழுத்தினால் போதும். உங்களது விண்ணப்பத்தை அந்தந்த கம்பெனிகளின் HR-கள் நேரடியாக பார்க்க முடியும்.

விண்ணப்பித்துள்ள அந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்று நினைத்தால், கம்பெனி தரப்பில் இருந்து நேரடியாக உங்களைத் தொடர்பு கொண்டு பேசுவார்கள். பிறகு, நேர்காணலில் நீங்கள் தேர்வாகும் பட்சத்தில், சம்பளம் குறித்து உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில், முடிவு எட்டப்படும் பட்சத்தில் விசா உள்ளிட்ட மற்ற பிராசஸ் தொடர்பான விவரங்கள் கம்பெனி சார்பில் உங்களிடம் தெரிவிக்கப்படும்.

இந்த வெப்சைட் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்க எந்த ஏஜென்ட்டின் உதவியும் உங்களுக்கு தேவையில்லை. அவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுக்க நீங்கள் கடன் வாங்கவும் தேவையில்லை. அந்த கடனை வட்டியுடன் திருப்பி அடைக்கவும் தேவையில்லை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts