சிங்கப்பூரில் லாரியுடன் மோட்டார் பைக் மோதியதன் காரணமாக பைக்கில் சென்றவர் உயிரிழந்துள்ளார். மேலும் உயிரிழந்தவர் 25 வயது இளைஞர் என தெரியவந்துள்ளது. 46 வயதான ஓட்டுநர் கவன குறைவாக லாரியை ஓட்டியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது .
புதன்கிழமை நேற்று காலை சுமார் 2.45 மணி அளவில் துவாஸ் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் பைக்கில் சென்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தற்காப்பு படை தெரிவித்துள்ளது. லாரியின் மீது பைக் வேகமாக மோதியதன் காரணமாக ஹெல்மெட் மற்றும் பெட்டி ஆகியவை பறந்து சென்று சாலையில் கிடந்தன.
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வீடியோவானது டிக் டாக்கில் வெளியிடப்பட்டது. இதில் விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்த நபரின் மீது வெள்ளை நிற துணி போர்த்தி இருப்பதையும் வாகனம் நிற்பதையும் காணமுடிகின்றது. மேலும் ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர்.இதனை ஒட்டி சாலையில் செல்லும் பொழுது கவனமுடன் செல்ல வேண்டியது மிகவும் முக்கியம் என சிங்கப்பூரின் போக்குவரத்து துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.