TamilSaaga

சிங்கப்பூரில் உங்கள் CPF மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் பற்றி அறியவேண்டும்? – MOM அளித்த விளக்கம்

சிங்கப்பூரின் வேலைவாய்ப்புச் சட்டம் மற்றும் CPF சட்டத்தின்படி பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் முறையே தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை புரிந்து கொள்ள உதவுகிறது தற்போது மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு பதிவு. MOM மற்றும் CPF வாரியத்தால் 2012ல் தொடங்கப்பட்டது தான் Work-Right. வேலைவாய்ப்பு சட்டம் மற்றும் CPF சட்டத்துடன் தேசிய இணக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு இந்த Work-Right முயல்கிறது.

Work-Right ஆண்டுதோறும் கல்வி பிரச்சாரங்களை ஊடக விளம்பரம் மற்றும் சிங்கப்பூரின் முக்கிய பகுதிகளில் சாலை நிகழ்ச்சிகள் மூலம் நடத்துகிறது. வேலைவாய்ப்பு சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக வேலைவாய்ப்பு ஆய்வாளர்கள் பணியிட வருகைகளையும் நடத்துகின்றனர். “சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு ஊழியராக நீங்கள் வேலை நியமன சட்டத்தின்கீழ் வருகிறீர்கள். ஒரு சேவை ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஊழியர்கள், முதலாளிகள் ஆகியோரின் உரிமைகளையும் கடமைகளையும் வேலை நியமன சட்டம் எடுத்துக்கூறுகிறது. நீங்கள் சிங்கப்பூராக அல்லது சிங்கப்பூர் நிரந்தர வாசியாக இருந்தால் நீங்கள் மத்திய சேமநிதி பங்களிப்புகளை பெறுவதற்கு தகுதி பெறுவீர்கள்.”

“சேவை ஒப்பந்தம் என்பது ஒரு முதலாளிக்கும் ஒரு ஊழியருக்கும் இடையேயான ஒரு உடன்படிக்கையாகும் சேவைக்கான ஒப்பந்தம் என்பது ஒரு வாடிக்கையாளருக்கும் ஒரு சார்பில்லாத ஒப்பந்தகாரர்க்கும் இடையேயான ஒரு உடன்படிக்கை ஆகும். அதாவது ஒரு வேளை அல்லது திட்டப் பணியை ஒரு குறிப்பிட்ட கட்டணத்தில் நிறைவேற்றுவதற்காக சுய தொழில் புரிபவர் அல்லது விற்பனை அல்லது ஒப்பந்தகாரர் பயன்படுத்தப்படுகிறதா. நீங்கள் சேவையை ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெற்ற உள்ளீர்களா அல்லது சேவைக்கான ஒப்பந்தத்தின் கீழ் இடம் பெற்றுள்ளதா என்பதை நிர்ணயிக்க பல்வேறு காரணிகளை ஒட்டுமொத்தமாக கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.”

“முக்கிய காரணிகளில் இவை உள்ளடங்கும்.. வேலை வழங்குவது யாருடைய பொறுப்பு? கருவிகளையும் சாதனங்களையும் வழங்குவது யார்? அந்த வேலை ஒருவரின் சொந்த தேவைக்காக செயல்படுகிறதா அல்லது முதலாளிகள் செயல்படுகிறதா? உள்ளிட்டவை அடங்கும்.” “மாதத்திற்கு 50க்கு மேல் சம்பாதிக்கிறீர்களா? உங்கள் முதலாளி உங்கள் CPFக்கு பங்களிக்க வேண்டும். முழு நேர, பகுதி நேர, தற்காலிக அல்லது ஒப்பந்த ஊழியர்களாக இருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு இது பொருந்தும்.

மேலும் இதுகுறித்து விவரமறிய மனிதவள அமைச்சக இணையத்தை காணலாம்.

Related posts