டிசம்பர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை 167,000 non-resident வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இன்னும் 3.9% (44,000) கோவிட்டுக்கு முந்தைய நிலைகளுக்குக் கீழே உள்ளது.
சிங்கப்பூர் 2022ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 71,100 non-resident வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மனிதவள அமைச்சர் டாக்டர். டான் சீ லெங்கின் கூற்றுப்படி, 11,300 EP ஊழியர்கள், 5,900 SPass ஊழியர்கள் மற்றும் 53,900 வொர்க் பாஸ் ஊழியர்கள் அல்லது பிற பாஸ் ஊழியர்கள் அதிகரித்து இருப்பதே இந்த வளர்ச்சிக்குக் காரணமாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக, கோவிட்-19 முதல் ஒவ்வொரு ஆண்டும் resident வேலை வாய்ப்புகள் விரிவடைந்து வருகின்றன. அதேசமயம் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் non-resident வேலைவாய்ப்பு குறைந்து, மிகக் கடுமையான வீழ்ச்சியைப் பதிவுசெய்தது. மேலும் டிசம்பர் 2021ல் கோவிட்டுக்கு முந்தைய அளவை விட 211,000 என்ற அளவை எட்டியது.
எனவே, ஏப்ரல் 2022ல் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. கம்பெனி நிர்வாகம் காலியாக இருக்கும் பணியிடங்களை மீண்டும் நிரப்பியது. இதனால் non-resident வேலைவாய்ப்புகள் விரைவாக அதிகரித்துள்ளன என்று அமைச்சர் விளக்கினார்.
அடுத்த நான்கு காலாண்டுகளில், பெரும்பாலான புதிய வேலைகள் வெளிநாட்டவர்களுக்குச் செல்லும் என்றால் அதிகமான சிங்கப்பூரர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைகளைப் பெறுவதற்கு மனிதவள அமைச்சகம் (MOM) எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் கேட்டார். மேலும், டிசம்பர் 2021 முதல் செப்டம்பர் 2022 வரை non-resident வேலைவாய்ப்பு 167,000 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் இன்னும் 3.9% (44,000) கோவிட்-க்கு முந்தைய நிலைகளை விட குறைவாகவே உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் R1 ஊழியர்களுக்கு தான் demand… சம்பளம் மட்டுமே $1600 வெள்ளி… அப்படி என்ன ஸ்பெஷல்… எப்படி அப்ளே செய்யலாம்?
அடுத்ததாக, கடந்த இரண்டு காலாண்டுகளில் non-resident வேலை வாய்ப்பு வளர்ச்சி அதிகமாகக் காணப்பட்ட துறைகளாக manufacturing மற்றும் construction இருக்கிறது. இவை தான் வெளிநாட்டினர் அதிகம் நம்பி இருக்கும் துறைகள். மொத்தத்தில், முழுநேர வேலையில் இருப்பவர்களின் சராசரி வருமானம் 2016ல் $4,100 சிங்கப்பூர் டாலரில் இருந்து 2021ல் $4,700 சிங்கப்பூர் டாலராக உயர்ந்தது. இது உண்மையான அடிப்படையில் ஆண்டுக்கு 2.1% அதிகரிப்பாகும்.
சிங்கப்பூரின் குடியுரிமை வேலையின்மை விகிதம் மற்றும் குடியுரிமை நீண்ட கால வேலையின்மை விகிதம் கோவிட் நோய்க்கு முந்தைய சராசரிக்கு (முறையே 2.8% மற்றும் 0.7%) மீண்டிருக்கிறது. அதே நேரத்தில், வேலையில்லாத நபர்களுக்கான வேலை காலியிடங்களின் விகிதம் 2.2 ஆக இருந்தது. எனவே, MOM மொத்த வேலைவாய்ப்பும் தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கிறது.