சிங்கப்பூர் என்பதே ஒரு சின்ன சிறிய நாடு தான். ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற உதாரணத்துக்கு ஏற்ப நாடு தான் சிறுசு. ஆனால் இதன் வளர்ச்சி மிகப்பெரியது. தன்னால் முடியாது என நினைத்த உலகநாடுகளுக்கு தற்போது சிங்கப்பூர் சிம்மசொப்பனமாக மாறி இருக்கிறது. ஆனால் சிங்கப்பூரினை நோக்கியும் ஒரு ஆபத்து பின் தொடர்ந்து வருகிறது.
சிங்கப்பூரின் 90 சதவீத ரியல் எஸ்டேட்கள் அரசுக்கே சொந்தமானது. காரணம் மக்கள் தொகை 50 லட்சத்தினை கடந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. இதனால் மக்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி தர எண்ணும் அரசு தொடர்ந்து தொடர்ந்து நாட்டின் எல்லையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றனது.
இதையும் படிங்க: Skill அடிக்க இன்ஸ்டியூட் போறீங்களா… Aluminum Formwork பயிற்சி முதல் டெஸ்ட் வரை எப்படி இருக்கும்? சம்பளம் எவ்வளவு இருக்கும்?
இந்த முறையை 1822ம் ஆண்டில் இருந்து சிங்கப்பூர் அரசு செய்து வருகிறது. அப்போது நாட்டினை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இந்த பணியை தொடங்கியது. தற்போது Boat Quay என அழைக்கப்படும் பகுதிக்கு அருகில் துறைமுகத்தினை உருவாக்கியது. மரங்களாக நிறைந்து இருந்த அந்த பகுதிக்கு அருகில் இருந்த தாழ்வான பகுதிக்கு அருகில் இருந்த மலையில் இருந்து மண் கொண்டு வந்து நிரப்பினர். காடாக இருந்த பகுதி தற்போதைய காலத்தில் மிகப்பெரிய க்ளிப்கள், பார்ட்டிக்கு பெயர் போனதாக இருக்கிறது.
1900த்தின் தொடக்கத்தில் Thian Hock Keng கோவில், Telok Ayer பகுதிகள் அருகில் இருந்தது. வளர்ச்சியை முன்னிட்டு அந்த பகுதியினை தாண்டியும் நிலபரப்பு அதிகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, 1965க்கு பிறகே நிலப்பரப்பு விரிவாக்கம் வேகமாக செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த 50 வருடங்களில் 138 சதுர கி.மீக்கு சிங்கப்பூரின் எல்லைகள் விரிவுப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் 2500 வெள்ளி சம்பளம் கொடுக்கும் வேலை… ஓவர் டைமும் இருக்கும்… பஞ்சமே இல்லாத துறை… லைஃப் பக்கா செட்டில்!
வளர்ச்சி அடையாத பகுதிகளின் கட்டடங்களை கட்டி அந்த இடத்தினையே பெரிய அளவில் மாற்றம் செய்து வருகிறது சிங்கப்பூர் அரசு. இருந்தும் பெரும்பாலான பகுதிகள் கடலில் இருந்து 50 அடிக்கு மேலாக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதை விட கால்வாசி பகுதிகள் வெறும் 16 அடிக்கு மேலே மட்டும் இருக்கிறது.
இதனால், தொடர்ந்து மாறிவரும் பருவநிலையால் கடல் நீர் மட்டத்தில் தொடர்ந்து ஏற்றம் இருக்கும் எனக் கூறி இருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதனால் சிறிய தீவான சிங்கப்பூரின் பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் உலா வருகிறது. இதனை தொடர்ந்து தடுக்க மற்ற தீவு நாடுகளைப் போல சிங்கப்பூரும் சரியான திட்டமிடலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.