சிங்கப்பூரில் இருக்கும் ஒவ்வொருவரும் வேகமாக உழைத்து வருகின்றனர் என்பதற்கு அடிக்கடி சில எடுத்துக்காட்டுகள் இணையத்தில் ட்ரெண்ட் அடிப்பதை வாடிக்கையாக வைத்து இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் சிங்கப்பூரினை சேர்ந்த ஒரு கால் டாக்ஸி டிரைவர் தான் தற்போதைய ஆன்லைனின் பேசுப் பொருளாக மாறி இருக்கிறார்.
கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவரின் ஜனவரி 9 முதல் 15 வரை வருமானம் குறித்த ஸ்கிரீன்ஸாட் Beh Chia Lor – Singapore Road Facebook பக்கத்தில் மீண்டும் பகிரப்பட்டுள்ளது.
அந்த ஸ்கிரீன்ஸாட்டில் டிரைவரின் மொத்த வருமானத்தில் இருந்து கமிஷன் மற்றும் GST பிடித்தமாக $792.38 சிங்கப்பூர் டாலர் கழிக்கப்படுவதற்கு முன்பு $6,020.20 சிங்கப்பூர் டாலராக இருந்தது.
இதையும் படிங்க: சர்ச்சையான சிங்கப்பூர் பொங்கல் போட்டி… திருவள்ளுவருக்கு காவி உடை? தமிழறிஞரான அவர் இந்துவா? சமணரா? மீண்டும் பற்றிய தீ!
எல்லா பிடித்தத்திற்கு பிறகு, அந்த வாரத்திற்கான ஓட்டுநரின் மொத்த வருவாய் $5,227.82 சிங்கப்பூர் டாலராக இருந்தது. வருவாயில் $2 சிங்கப்பூர் டாலர் அளவில் டிப்ஸும், $2,080.7 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள ஊக்கத்தொகைகளும் அடங்கும்.
மொத்த வருவாயில் இருந்து ஊக்கத்தொகைகளைத் தவிர்த்து, ஓட்டுநர் ஜனவரி 9 முதல் 15 வரையிலான வாரத்தில் மட்டும் சவாரிகளின் அடிப்படையில் $3,147.12 சிங்கப்பூர் டாலர் சம்பாதித்திருக்கலாம்.
அவர் அந்த வாரத்தில் ஏழு நாட்களும் ஓட்டினார் என்று வைத்துக் கொண்டால், இது ஒரு நாளைக்கு சராசரியாக $449.50 சிங்கப்பூர் டாலராக இருக்கும்.
எப்படி இருந்தாலும், வாகன வாடகை செலவுகள், பெட்ரோல் கட்டணம் மற்றும் பார்க்கிங் செலவுகள் மற்றும் incentive ஆகியவை குறித்த அதிக விவரங்கள் அந்த ஸ்கீரின்ஸாட்டில் இடம் பெறவில்லை.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருந்து SPass மாறணுமா? 3000 சிங்கப்பூர் டாலரில் சம்பளம்.. செம வாழ்க்கை… இத படிங்க!
மேலும் சில தனியார் வாடகை ஓட்டுநர்கள் அல்லது இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள், அந்தத் தொகையைச் சம்பாதிப்பதற்காக ஓட்டுநர் ஒவ்வொரு நாளும் 12 முதல் 20 மணிநேரங்களுக்கு இடைப்பட்ட நேரத்தைச் செலவிட்டு இருக்க வேண்டும். அப்போது தான் இவ்வளவு தொகையை சம்பாரித்து இருக்க முடியும் என்றனர்.
பிப்ரவரி 2022 இல் வெளியிடப்பட்ட பிளாட்ஃபார்ம் பணியாளர்கள் குறித்த இன்ஸ்டிடியூட் ஆப் பாலிசி ஸ்டடீஸ் சர்வேயில், தனியார் வாடகை ஓட்டுநர்களும், டெலிவரி ரைடர்களும் நல்ல ஊதியத்தைப் பெற நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும் என்று கண்டறிந்துள்ளது.
ஒரு மாதத்திற்கு $5,000க்கு மேல் சம்பாதிப்பதற்காக ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக சைக்கிள் ஓட்ட வேண்டிய டெலிவரி ரைடரின் உதாரணத்தை குறிப்பிடப்பட்டு இருந்தது.
சிங்கப்பூரின் தனியார் வாடகை வாகன ஓட்டுநர்கள் வாரத்தில் 59 மணிநேரம் வேலை செய்கிறார்கள் என்பதையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
சாலையில் நீண்ட நேரம் செலவழிக்கும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு rest period policy செயல்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிந்தனர். அதாவது, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு வாகனம் ஓட்டிய பிறகு ஓய்வெடுக்க ஓட்டுநர்களை ஊக்குவிப்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ அவர்களால் முடியும்.