TamilSaaga

வெளிநாட்டவர்கள் இனி “40 புள்ளிகள்” எடுத்தால் தான் உள்ளே வர அனுமதி – சிங்கப்பூர் அரசின் புதிய உத்தரவு – துல்லியமான Detailed Report

நமது சிங்கப்பூரில் பணிபுரியும் பலரும், அரசின் புதிய அறிவிப்பான ‘Compass’ குறித்து பல கேள்விகளை எழுப்பி வந்தனர். அவர்களின் புரிதலுக்காக இந்த கட்டுரை.

அதாவது, வரும் செப்.2023 முதல் Employment Pass (EP) எடுக்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள், Complementarity Assessment Framework (Compass) கீழ் குறைந்தபட்சம் 40 புள்ளிகள் எடுத்தாக வேண்டும்.

“வெளிநாட்டினருக்கு மிகவும் பாதுகாப்பான நாடு” : உலக அளவில் நம்ம சிங்கப்பூருக்கு 5வது இடம் – பெருமைப்பட வைக்கும் William Russell ரிப்போர்ட்

அதுசரி COMPASS என்றால் என்ன?

இது சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு உயர்தர வெளிநாட்டு நிபுணர்களைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது. அதே நேரத்தில் பணியாளர்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்துகிறது. அதாவது, திறமையான வெளிநாட்டு ஊழியர்களை சல்லடை போட்டு தேர்ந்தெடுக்க உதவும் அமைப்பு தான் COMPASS. இதன் மூலம், சிங்கப்பூரை இன்னும் வலிமையான நாடாக உருவாக்குவதே நோக்கம். இது ஒரு வெளிப்படையான அமைப்பாகும்.

அந்த வகையில், அரசின் புதிய அறிவிப்பின்படி COMPASS-ன் விதிகளுக்கு உட்பட்டு 40 புள்ளிகள் எடுத்தால் தான் Employment Pass (EP)-க்கு விண்ணப்பிக்க முடியும்.

அதே போன்று renewals செய்ய வேண்டியவர்களுக்கு, இந்த புதிய மதிப்பீடு முறை செப்டம்பர் 2024 முதல் செயல்பட தொடங்கும்.

Compass மதிப்பீடு என்பது two-stage evaluation-ன் இரண்டாம் பகுதியாகும். அது என்ன two-stage evaluation? Employment Pass (EP)-க்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் இரண்டு முறைகளில் மதிப்பீடு (Evaluation) செய்யப்படும். அதில் இரண்டாவது முறை தான் இந்த ‘Compass மதிப்பீடு’. இதுதவிர மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில், விண்ணப்பிப்பவர் குறைந்தபட்ச EP தகுதிச் சம்பளத்தை பூர்த்தி செய்தாக வேண்டும். அதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த Compass அமைப்பின் கீழ், நான்கு “அடிப்படை” அளவுகோல்கள் மதிப்பிடப்படுகின்றன.

ஒரு தனிநபரின் சம்பளம்
தனி நபரின் தகுதிகள்
நிறுவனத்தின் தொழிலாளர் பன்முகத்தன்மை
உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் பங்களிப்பு

ஆகிய இந்த நான்கு criteria-க்களும் மதிப்பிடப்படுகிறது.

இந்த ஒவ்வொரு அளவுகோலை மதிப்பிடுகையில், ஒரு விண்ணப்பம் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக உள்ளது (exceed expectations,) எனில், அதற்கு 20 புள்ளிகள் வழங்கப்படுகிறது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களுக்கு (meet expectations) 10 புள்ளிகளும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களுக்கு பூஜ்ஜியம் தான் வழங்கப்படும்.

இதில், 25 க்கும் குறைவான தொழில் வல்லுநர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (PMETs) கொண்ட சிறிய நிறுவனங்களுக்கு, தானாகவே “எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்” (meeting expectations) மதிப்பெண் கிடைக்கும். அதாவது இதுபோன்ற சிறிய நிறுவனங்களில் வேலைப் பார்க்க E-Pass விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால், அந்த ஒரு குறிப்பிட்ட Category-ல் உங்களுக்கு 10 புள்ளிகள் தான் கிடைக்கும்.

artificial intelligence developer-கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் போன்ற திறமையான ஆட்களுக்கு பற்றாக்குறை உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் புள்ளிகள் (Extra points) வழங்கப்படுகின்றன.

ஆனால் அத்தகைய பணியிடங்களை நிரப்ப விரும்பும் ஒவ்வொரு நிறுவனமும் இந்த கூடுதல் புள்ளிகளைப் பெறும் என்று இது அர்த்தமாகாது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் இருந்து சிங்கப்பூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒருவர் வேலைக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், அந்த நிறுவனத்தின் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் இந்தியர்களாக இருந்தால், அவருக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்காது.

இதற்கிடையில், ambitious innovation மற்றும் சர்வதேசமயமாக்கல் நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைந்திருக்கும் நிறுவனங்கள் 10 போனஸ் புள்ளிகளைப் பெறலாம்.

போனஸ் புள்ளிகளைப் பெறத் தவறிய Employment Pass விண்ணப்பதாரர்கள் இன்னும் போதுமான புள்ளிகளைப் பெற முடியும், எடுத்துக்காட்டாக, நான்கு அடிப்படை அளவுகோல்களில் ஒவ்வொன்றிற்கும் அது “எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்தால்” டீசண்ட்டான புள்ளிகளைப் பெற முடியும்.

ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தொடர் தடைகள் : “நட்பற்ற நாடுகளின் பட்டியலில்” சிங்கப்பூரை இணைத்த மாஸ்கோ – சிங்கப்பூர் நிறுவனங்கள் பாதிக்கப்படுமா ?

அதேபோன்று, விண்ணப்பதாரர்கள் சில Category-ல் எதிர்பார்ப்புகளுக்குக் குறைவாக இருந்தால், அது மற்ற அளவுகோல்களில் எதிர்பார்ப்புகளை சிறப்பாக பூர்த்தி செய்வதன் மூலம் அல்லது போனஸ் புள்ளிகளைப் பெறுவதன் மூலம் இழந்த புள்ளிகளை ஈடுசெய்யலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts