TamilSaaga

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி? : சிங்கப்பூர் MOH வெளியிட்ட புதிய தகவல்

சிங்கப்பூரில் வரும் ஜனவரி 1 முதல், பெருந்தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அல்லது கடந்த 270 நாட்களுக்குள் நோயிலிருந்து மீண்ட ஊழியர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் (MOH) நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 23) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் தொற்றுக்கு எதிர்மறையாக சோதனை செய்தாலொழிய தங்கள் பணியிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள்.மேலும் இந்த ஊழியர்கள் தங்கள் சோதனைச் செலவுகளைச் சுமப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சோதனைகள் MOH-அங்கீகரிக்கப்பட்ட வழங்குநர்களிடம் நிர்வகிக்கப்பட வேண்டும். மற்றும் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருக்க வேண்டிய காலத்திற்கு செல்லுபடியாகும் சோதனை முடிவுகளை வழங்கவேண்டும். எதிர்மறை ஆன்டிஜென் விரைவு சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்ப்பிணி அல்லது தடுப்பூசிகளுக்கு மருத்துவ தகுதியற்ற ஊழியர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த முதலாளிகள் “கடுமையாக ஊக்குவிக்கப்படுகிறார்கள்” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சினோவாக் தடுப்பூசி உட்பட தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைத்து தடுப்பூசிகளுக்கும் மருத்துவ ரீதியாக தகுதியற்ற ஊழியர்களுக்கு, அவர்கள் தளத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தால் தடுப்பூசி தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று MOH மற்றும் மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி போடப்படாத கர்ப்பிணிப் பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விருப்பங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று MOM தெரிவித்துள்ளது.

Related posts