சிங்கப்பூரில் இருக்கும் கம்பெனிகள் அத்தனை எளிதாக தமிழ்நாட்டில் இருந்தோ இல்லை வெளிநாட்டில் இருந்தோ ஊழியரை வேலைக்கு எடுத்து விட முடியாது. அதற்கும் சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. இதை தான் கோட்டா என்கிறது சிங்கப்பூர் மனிதவளத்துறை. ஒவ்வொரு கம்பெனியிலும் இருக்கும் கோட்டாவின் அளவினை வைத்து தான் வொர்க் பெர்மிட் மற்றும் SPass ஊழியர்கள் வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு சிங்கப்பூர் நிறுவனம் 10 சிங்கப்பூரினை சேர்ந்த ஊழியர்களை வேலைக்கு வைத்திருந்தால் 1 SPass மற்றும் 69 வொர்க் பெர்மிட் ஊழியர்களை வேலைக்கு எடுத்து கொள்ளலாம். கம்பெனியின் மொத்த ஊழியர்களின் தொகையில் 15 சதவீத SPass ஊழியர்களை எடுத்துக்கொள்ள முடியும். அதாவது 100 ஊழியர்கள் இருந்தால் மொத்தம் 15 SPass ஊழியர்களை நியமித்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேல இருக்கானு கேட்டு அலுத்துப்போயிட்டீங்களா? படித்தாலும் இல்லனாலும் கவலையே இல்ல.. சட்டுனு இத படிங்க… வேலை கியாரண்டி தான்!
Marine Shipyardல் 10 சிங்கப்பூர் ஊழியர்கள் இருந்தால் 35 வெளிநாட்டு ஊழியர்களை வொர்க் பெர்மிட்டில் வேலைக்கு எடுத்துக்க முடியும். கோட்டா குறிப்பிட்ட லிமிட்டை விட அதிகரிக்கும் போது உங்கள் கம்பெனியில் இருக்கும் சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட வேண்டும். Construction, Manufacturing, Marine Shipyard, Process, Services ஆகிய துறைகளில் இருக்கும் கம்பெனிகள் கட்டாயம் இந்த கோட்டாவினை ஃபாலோ செய்ய வேண்டியது கட்டாயம்.
Service sectorல் வேலைக்கு எடுக்கும் போது மொத்த ஊழியர்களில் SPass ஊழியர்கள் 10 சதவீதமாக இருக்க வேண்டும். வொர்க் பெர்மிட்டின் அளவு அதிகமாக இருந்தால் அதை SPass பெர்மிட்டாக எடுக்கவே முடியாது. குறிக்கப்பட்ட கோட்டாவின் அளவு அந்தந்த பெர்மிட்டாக தான் பயன்படுத்த முடியும். சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கை கம்பெனியின் கடந்த 3 மாத மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை பொருத்தே அமையும்.
construction, manufacturing, marine shipyard, process or services துறையில் உள்ள கம்பெனிகள் மட்டுமே தங்கள் வெளிநாட்டு பணியாளர்களுக்கான வொர்க் பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களுக்கான கோட்டாக்கள் மிகவும் சிக்கலானதாக இருக்கலாம். மேலும் MOM இணையதளத்தில் கம்பெனி கோட்டா மற்றும் லெவி பில் கணக்கிடுவது என்பதற்கும் calculator இருக்கும்.
கூடுதலாக, அனைத்து வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களும் 60 வயது வரை மட்டுமே வேலை செய்ய முடியும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்யலாம் என்ற கட்டுப்பாடும் இருக்கலாம்.
ஒரு கம்பெனி வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் லெவிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில், அதிக திறன் கொண்ட வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களை வேலைக்கு அமர்த்தப்படுகின்றன. EPass ஊழியர்களுக்கு இந்த கோட்டா அளவு என்பது இருக்காது. உங்களின் கம்பெனியின் கோட்டாவின் கணக்கினை தெரிந்து கொள்ள https://www.mom.gov.sg/passes-and-permits/work-permit-for-foreign-worker/foreign-worker-levy/calculate-foreign-worker-quota இதில் தெரிந்து கொள்ளலாம்.