TamilSaaga

சிங்கப்பூரில் வேல இருக்கானு கேட்டு அலுத்துப்போயிட்டீங்களா? படித்தாலும் இல்லனாலும் கவலையே இல்ல.. சட்டுனு இத படிங்க… வேலை கியாரண்டி தான்!

சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் போது பலரும் வாழ்க்கை மாறிவிடும் என்ற எண்ணத்தில் தான் செல்கிறார்கள். எப்போதும் அது தானாக நடக்காது. நாம் தான் நடத்த வேண்டும். முதலில் நீங்க சிங்கப்பூர் போவதற்கான சரியான வழியை தேர்ந்தெடுங்கள். தீர விசாரியுங்கள். காசு கொடுத்து செல்லலாம் என்றால் அதற்கு நிறைய வழி இருக்கிறது. அதில் ஒன்றை பிடியுங்கள்.

படிக்கவில்லை இருந்தும் சம்பாரிக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு சிங்கப்பூர் செல்ல இரண்டு வழிகள் இருக்கிறது. Shipyard மற்றும் PCM பெர்மிட்டில் சிங்கப்பூர் செல்லலாம். இதற்கு ஏஜெண்ட் கட்டணமாக 2 லட்சம் வரை கேட்பார்கள். வேலை கப்பல் கட்டும் இடத்திலும், தொழிற்சாலைகளிலும் இருக்கும். சம்பளம் ஒரு நாளைக்கு $18 சிங்கப்பூர் டாலர் வரை கொடுப்பார்கள்.

இதனையடுத்து Skilled டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வது. நீங்கள் இருக்கும் ஏரியாவில் உள்ள அதிகாரப்பூர்வ டெஸ்ட் சென்டர்களில் அட்மிஷன் போட்டு 45 முதல் 60 நாட்கள் வரை பயிற்சி எடுத்து மெயின் தேர்வு செல்ல வேண்டும். எழுத்து மற்றும் பிராக்டிக்கல் எக்ஸாம் இருக்கும். இதில் வருபவர்களுக்கும் pcm அளவிலான சம்பளமே கிடைக்கும். இருந்தும் இந்த பாஸில் வேலைக்கு செல்பவர்களுக்கு இதே சம்பளம் தான் ஆரம்பத்தில் கிடைக்கும். வருடங்கள் ஆக ஆக அனுபவத்திற்கு ஏற்றவாறு சம்பளம் உயரும். தொடர்ந்து ஏஜென்ட் கட்டணமாக 3 லட்சம் வரை கேட்பார்கள்.

மேலே கூறியது எல்லாம் படிக்காதவர்களுக்கு. படித்தவர்களுக்கு குறைந்தது $2500 சிங்கப்பூர் டாலர் சம்பளத்தில் துவங்கி $30000 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் தரும் பாஸ்கள் சிங்கப்பூரில் இருக்கிறது. SPass, EPass, One Pass என பாஸ்கள் இருக்கிறது. இதில் உங்க கல்வி தகுதியை வைத்தும் மேலும் உங்களிடம் இருக்கும் சிறப்பு talentஐ வைத்தும் பாஸ்களை தேர்வு செய்யப்படலாம். இதற்கு ஏஜென்ட் கட்டணமாக 4 லட்சத்தில் இருந்து அதிகமாக 5 லட்சம் கூட கேட்பார்கள்.

இதையும் படிங்க: நர்ஸிங் படிச்சிருக்கீங்களா அப்போ உங்களுக்கு தான் சிங்கப்பூர் பட்டுக்கம்பளம் விரிக்கும்… சீக்கிரம் அப்ளே செய்யுங்க.. 1 லட்சம் வரை சம்பளம் கிடைக்குமாம்!

Skilled test முடித்து விட்டு சிங்கப்பூர் வருபவர்கள் இங்கு 4 வருடத்திற்கு மேல் அனுபவம் வைத்திருந்தால் coretrade முடிக்கலாம். இதற்கு சில நூறு டாலர்கள் தான் செலவுகள் இருக்கும். ஆனால் இதை முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் கட்டப்படும் levy குறைவு என்பதால் அதிகமான நிர்வாகத்தினர் அனுபவம் இருப்பவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும். இதற்காக சிங்கப்பூரில் இருக்கும் இன்ஸ்ட்யூட்டில் சேர்ந்து 3 முதல் 4 நாட்களில் முடிக்கலாம்.

மேற்கூரிய அனைத்துமே படித்தாலும், படிக்கவில்லை என்றாலும் ஒரு சில லட்சம் கட்ட வேண்டுவதாக இருக்கும். ஏஜென்ட் கட்டணமே இல்லாமல் செலவும் செய்யாமல் சிங்கப்பூரில் ஆன்லைன் வேலைவாய்ப்பு தளங்கள் மூலம் கூட வேலை தேடலாம். ஆனால் இது அவ்வளவு எளிதில் நடந்து விடாது. பொறுமை ரொம்ப முக்கியமாக இருக்க வேண்டும். சிலருக்கு 100க்கும் மேல் அப்ளிகேஷன் போட்ட பிறகே வேலை கிடைத்து இருக்கிறது.

இதில் உங்க கல்வி தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப ஒன்றை தேர்ந்தெடுத்து அது குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தினை தேடி வரும்போது காலம் எடுத்து சில முடிவுகளை எடுப்பதே சரியாக இருக்கும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts