TamilSaaga

சிங்கப்பூரில் Cleaner வேலை பார்த்து சேர்த்த பணம்.. 50 வருஷ சேமிப்பை திருடிட்டாங்க – மோசடி ஆசாமிகளிடம் 30 லட்சம் வெள்ளியை இழந்த முதியவர்

சிங்கப்பூரில் உள்ள 62 வயதான துப்புரவுத் தொழிலாளி ஒருவர், சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி மோசடி செய்தவர்களால் சுமார் 50 வருடம் அவர் பாடுபட்டு சேர்த்த S$330,000 மதிப்பிலான சேமிப்பை இழந்துள்ளார் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

மோசடியில் பாதிக்கப்பட்ட ஜாங் ஹான் செங், கடந்த நவம்பர் 2021ல் பெருதொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நலம் தேறி வந்துள்ளார். அப்போது ​ஷாங்காயில் போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் ஒருவரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அந்த மோசடி செய்பவர் ஜாங்கிடம் நீங்கள் “பணமோசடி நடவடிக்கையில்” ஈடுபட்டுள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது ஆகவே எங்கள் விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று கூறி சற்று மிரட்டல் தொனியில் பேசியுள்ளான்.

Exclusive : சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி ராஜேந்திரன்.. நிராதரவாக நிற்கும் குடும்பம் – உதவி கேட்டு மனைவி வெளியிட்ட உருக்கமான வீடியோ

விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில், அவர் ஒரு புதிய வங்கிக் கணக்கைத் ஓபன் செய்து, தன்னிடம் உள்ள பணம் நல்ல வழியில் சம்பாரித்து தான் என்று நிரூபிக்க அவர்களுக்கான கணக்கிற்கு பணத்தை மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

மோசடி செய்தவன் பாதிக்கப்பட்டவரின் வீட்டு முகவரி உள்பட பலர் தனிப்பட்ட தகவல்களை சரியாக சொன்னதையடுத்து இதுவரை ஷாங்காய்க்கே செல்லாத அந்த முதியவர் அங்கு ஒரு வங்கி கணக்கை திறந்துள்ளார். இந்த காலத்தில் மோசடி செய்பவர்கள் படு கில்லாடிகளாக இருக்கின்றனர்.

இறுதியில் சீன அதிகாரிகள் மற்றும் ஷாங்காய் காவல்துறையினரிடமிருந்து பாதிக்கப்பட்ட முதியவர் சில அத்தாச்சி கடிதங்களைப் பெற்றதாகக் கூறப்பட்டது. இந்த கடிதங்கள் அவர் எதோ சட்ட சிக்கலில் இருப்பதாக அவரயே உணரவைத்துள்ளது.

இறுதியில் அவரது பெருதொற்றால் பாதிக்கப்பட்ட அவரின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததும், ஜாங் வங்கிக்குச் சென்று, அந்த கணக்கிற்கு S$60,000ஐப் பரிமாற்றம் செய்து, தனது வங்கிக் கணக்கின் ஒரு முறை கடவுச்சொல்லை அந்த மோசடி செய்பவருக்கு வழங்கியுள்ளார்.

சிங்கப்பூர்.. இவ்வாண்டு மட்டும் 30 பணியிட மரணங்கள்.. அதிக அளவிலான தொழிலாளர்கள் இறந்தது எப்படி? வெளியான புதிய புள்ளிவிவரம்

பின்னர், இறுதியாக கடந்த டிசம்பர் 7, 2021 அன்று, அவர் தனது வங்கிக் கணக்கைச் சரிபார்த்தபோது, ​​அவரிடம் S$49.25 மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இறுதியாக தனது சகோதரரிடம் நடந்தை கூற அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஏன் பணத்தை எங்களிடம் சொல்லாமல் பரிமாற்றம் செய்தாய் என்று அவரிடம் கேட்டபோது அந்த மோசடி கும்பல் இந்த விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறியதாகவும் பாதிக்கப்பட்ட முதியவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த வழக்கு குறித்து புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகின்றனது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts