TamilSaaga

Exclusive : சிங்கப்பூரில் உயிரிழந்த தமிழக தொழிலாளி ராஜேந்திரன்.. நிராதரவாக நிற்கும் குடும்பம் – உதவி கேட்டு மனைவி வெளியிட்ட உருக்கமான வீடியோ

ஒரு தொழிலாளியின் மரணம் என்பது நாம் தினமும் கடந்துபோகும் பல விஷயங்களில் ஒன்றல்ல என்பதை நிரூபித்துள்ளது சிங்கப்பூரில் சில தினங்களுக்கு முன்பு இறந்த தமிழக தொழிலாளி ஒருவரின் மரணம். கடந்த ஓராண்டுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தவர் தான் தமிழரான பெரியசாமி ராஜேந்திரன்.

சிங்கப்பூரின் காவல்துறை மற்றும் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கூட்டுப் பயிற்சி பெறும் Home Team Tactical Centre அமைந்துள்ள 1 Mandai Quarry சாலையில், கடந்த ஜூன் 22ம் தேதி காலை 10.15 மணியளவில் ஒரு பணியிட விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் கிரேனில் சிக்கி இறந்தவர் தான் ராஜேந்திரன் வயது வெறும் 32.

7 மாத கைக்குழந்தை, 13 மற்றும் 4 வயதில் இரண்டு மகள்கள், 30 வயதில் மாமனார் மற்றும் மாமியார் நிழலில் வாழும் ஒரு மனைவி என்று ஒரு மிகப்பெரிய குடும்பத்தை தனியே தவிக்கவிட்டு சென்றுள்ளார் ராஜேந்திரன். சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரனின் உறவினர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராஜேந்திரனின் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களின் நிலையை நமது தமிழ் சாகா செய்தி குழு கேட்டறிந்தது.

மேலும் பொதுமக்கள் உதவியை நாடும் அந்த குடும்பத்திற்கு உதவ நமது தமிழ் சாகா செய்திக்குழு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது. ராஜேந்திரனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் கீழ் காணும் வங்கி கணக்கிற்கு தங்கள் உதவிகளை செய்யலாம்.

Indian Bank
Veppur Branch
Name: Sathya
A/C NO: 7247233853
IFSC : IDIB000V121

இந்த வங்கி கணக்கு சிங்கப்பூரில் பணியிடத்தில் இறந்த ராஜேந்திரனின் மனைவி சத்யா (வயது 30) அவர்களின் வங்கி கணக்கு. ஆகவே உதவ மணமுள்ள நல்ல உள்ளங்கள் தங்கள் உதவிகளை அளிக்கலாம்.

ராஜேந்திரனின் மரணமே நம் மனதை விட்டு இன்னும் நீங்காத நிலையில், சிங்கப்பூரில் கடந்த ஜூலை 13ம் தேதி மேலும் ஒரு தொழிலாளி பணியிடத்தில் வேலைபார்த்துக்கொண்டிருந்த நிலையில் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சிங்கப்பூரில் 30 பேர் பணியிட விபத்தில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts