TamilSaaga

பசி, தூக்கமின்றி ஒரு வருடம் பாடம் சொல்லிக் கொடுத்த தந்தை.. அப்படி இருந்தும் Maths-ல் 100-க்கு 6 மார்க் எடுத்த மகன் – கண்ணீர் விட்டு அழுத தந்தை!

பெற்ற மகனை நினைத்து எது எதற்கோ அழுத தந்தைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இப்படியொரு சம்பவத்திற்கு ஒரு தந்தை நெஞ்சு வெடித்து அழுது பார்ப்பது இதுவே முதன்முறை.

இதுகுறித்து Qilu Evening News வெளியிட்டுள்ள செய்தியில், ‘சீனாவின் Henan பகுதியில் வசித்து வரும் தம்பதியின் மகன் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவர் கணிதப்பாடத்தில் 40 – 50 மதிப்பெண்களையே எடுத்து வந்துள்ளார். மற்ற பாடங்களைப் போல அவரால் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியவில்லை.

இதையடுத்து, அந்த மாணவனின் தந்தை, கடந்த ஒரு வருட காலமாக தினம் கணிதப்பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுத்து வந்திருக்கிறார். இரவு பகலாக கணிதம் மட்டுமே அவன் படித்து வந்துள்ளான். பள்ளி ஆண்டு இறுதித் தேர்வில் மகனை 80 – 90 மதிப்பெண் எடுக்க வைத்து காட்டுகிறேன் என்று தனது மனைவியிடம் சேலஞ் விடுத்து அவனை படிக்க வைத்திருக்கிறார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறும் இந்தியாவின் PSLV-C53 ராக்கெட்.. இன்னும் 24 மணி சிங்கப்பூரையே பெருமைப்பட வைக்கப்போகும் அற்புதம்! – உற்று நோக்கும் உலக நாடுகள்!

ஆண்டு இறுதித் தேர்வும் வந்தது… கணிதத் தேர்வு வந்தது. மகன் அதை எழுதிய ரிசல்ட்டும் வந்தது. ஆனால், எடுத்த மதிப்பெண்ணோ 100க்கு 6. அதை பார்த்த அடுத்த நொடி அவனது தனது வெடித்து அழும் வீடியோவை Qilu Evening News செய்தித் தளம் வெளியிட்டுள்ளது. அப்போது அவர் “இனி எனக்கு கவலை இல்லை, என் முயற்சி அனைத்தும் வீணாகிவிட்டது. இனி அவனே போராடட்டும்” என்று கோபம் பொங்க கொப்பளித்தார்.

ஆனால், இதில் கொடுமை என்னவெனில், இவர் மகனின் மதிப்பெண்ணை பார்த்து கதறிக்கொண்டிருக்க, அவரது மனைவியோ பின்னால் நின்று கொண்டு சிரிக்கும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த பலரும், அட்லீஸ்ட் 40 – 50 மார்க்காவது எடுத்து கொண்டிருந்த மகனை இப்படி, ஒரு வருடமாக தினம் தினம் டார்ச்சர் செய்து 6 மார்க் எடுக்க வச்சுட்டீங்களே என்று அந்த நபரை விமர்சனம் செய்து வருகின்றனர். சிலரோ, ஒரு வருடமாக நீங்கள் பாடம் எடுத்த லட்சணம் தான் ரிசல்ட்டாக வந்துள்ளது என்றும் பதிவிட்டுள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts