TamilSaaga

“உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும்” – களத்தில் இறங்கிய எம்.பி லியாங் எங் ஹ்வா

இன்று சிங்கப்பூரில் மழை சாரல் கொண்ட ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 1) காலை பொழுதில் புக்கிட் பஞ்சாங் குடியிருப்பாளர்களை எம்.பி லியாங் எங் ஹ்வாவின் குரல் ஸ்பீக்கர்கள் மூலம் எழுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்து காலை புக்கிட் பஞ்சாங் குடியிருப்பு பகுதிக்கு சென்ற எம்.பி. லியாங் எங் ஹ்வா “இந்த அருமையான ஞாயிற்று கிழமை காலைப்பொழுதில் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும், ஆனால் நாங்கள் காலை 10.50 மணியளவில் ART (ஆன்டிஜென் விரைவு சோதனை) சுய-சோதனை கருவிகளை விநியோகிப்போம்” என்று அவர் கூறினார்.

எம்பியின் பேச்சைக் கேட்க குடியிருப்பாளர்கள் தங்கள் ஜன்னல்களில் கூடினர், பின்னர் அறிவிப்பை அவர் முடித்த நிலையில் கைதட்டலுடன் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அறிவிக்கப்பட்ட 10 நிமிடங்களுக்குள், சிலர் தொகுதி 443 ஃபஜர் சாலையில் உள்ள ஒரு சமூக பெவிலியனில் அமைக்கப்பட்ட சேகரிப்பு மையத்திற்குச் சென்றனர்.

சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த சனிக்கிழமை இரவு மக்கள் சங்கத்துடன் இணைந்து 446 ஃபஜர் சாலை மற்றும் 497 ஜூரோங் மேற்கு தெரு 41 சந்தையில் உள்ள பஜார் சந்தைக்கு அருகில் வசிக்கும் மக்களுக்கு ART சுய பரிசோதனை கருவிகளை விநியோகிப்பதாக அறிவித்துள்ளது.

எம்.பியின் இந்த செயல் மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts